Published : 10 Dec 2019 10:41 AM
Last Updated : 10 Dec 2019 10:41 AM

குடியுரிமை மசோதாவுக்குப் பதிலாக முழுமையான அகதிகள் சட்டம் தேவை: முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் வலியுறுத்தல்

கோப்புப்படம்

புதுக்கோட்டை

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம் பரம் புதுக்கோட்டையில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ள குடியுரிமை மசோதா என்பது அரசியல் சாசனத்துக்கு முரணானது. குடியுரிமை மசோதாவுக்குப் பதிலாக முழு மையான அகதிகள் சட்டம் கொண்டு வரப்பட வேண்டும். எல்லா நாடு களிலும் அகதிகள் சட்டம் இருக் கிறது. அகதிகளாக யார் விண்ணப் பிக்கலாம், யாரை அகதிகளாக ஏற்றுக்கொள்ளலாம் என்பன போன்ற பல்வேறு விதிகள், மரபு கள் உள்ளன.

அவற்றை ஆராய்ந்து, நமது தேவைகளுக்கு ஏற்ப மாற்றம் செய்து அகதிகள் சட்டத்தை கொண்டு வருவதற்குப் பதிலாக, சமுதாயத்தில் பிளவு ஏற்படுத்தி ஒரு மதத்தினருக்கும் மற்றொரு மதத்தினருக்கும் இடையே பாகு பாடு செய்யக்கூடிய வகையில் குடியுரிமை மசோதாவை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது.

ஏறத்தாழ ரூ.1,600 கோடியில் அசாமில் தேசிய குடிமக்கள் பட்டியல் தயாரிக்கிறேன் என்று மத்திய அரசு செலவு செய்தது. பின்னர், அதை அசாம் அரசு நிரா கரித்துவிட்டது.

முரட்டுப் பெரும்பான்மையை வைத்து குடியுரிமை மசோதாவை பாஜக அரசு நிறைவேற்றிவிடலாம் என்று நினைத்தால் அது தவறு. இதை ஒதுக்கி வைத்து விட்டு அரசியல் கட்சிகளையும், அறிஞர் களையும் கலந்தாலோசித்து முழு மையான அகதிகள் சட்டம் கொண்டு வருவது விவேகம் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x