Published : 10 Dec 2019 10:21 AM
Last Updated : 10 Dec 2019 10:21 AM
கர்நாடக இடைத்தேர்தலில் வென்று ஆட்சியை தக்க வைத் தது தென் மாநிலங்களில் பாஜக வெற்றிக்கு வழிவகுக்கும் என்று அக்கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் பி.முரளிதர ராவ் தெரிவித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது:
கர்நாடக மாநிலத்தில் 15 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலில் 12 தொகுதிகளில் பாஜக வென்று ஆட்சியை தக்கவைத்துள்ளது. இந்த 12 தொகுதிகளையும் காங் கிரஸ், மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சியிடம் இருந்து பாஜக கைப் பற்றியுள்ளது.
இது, பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தலைவர் அமித் ஷா, கர்நாடக முதல்வர் எடியூரப்பா ஆகியோருக்கு கிடைத்த வெற்றி. எடியூரப்பா தலைமையிலான நிலையான, நல்லாட்சி தொடர வேண்டும் என்று கர்நாடக மக்கள் வாக்களித்துள்ளனர். மக்களின் இந்த நம்பிக்கையை பாஜக காப்பாற்றும். அடுத்த 3 ஆண்டுகளில் கர்நாடகத்தின் வளர்ச்சிக்கு பாஜக அரசு உழைக்கும்.
மக்கள் பாடம் புகட்டினர்
கர்நாடகாவில் கிடைத்துள்ள இந்த வெற்றி, தென் மாநிலங்களில் பாஜகவின் வெற்றிக்கு வழி வகுக்கும். மக்களவைத் தேர்தல் முடிவுகளுக்கு பிறகு ஆட்சி அமைத்த பாஜக மீது காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அபாண் டமான குற்றச்சாட்டுகளை சுமத் தின. அதற்கு இந்த இடைத் தேர்தலில் மக்கள் சரியான பாடம் புகட்டியுள்ளனர்.
இவ்வாறு முரளிதர ராவ் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT