Published : 10 Dec 2019 09:12 AM
Last Updated : 10 Dec 2019 09:12 AM

பிப்.5-ல் தஞ்சாவூர் பெரிய கோயில் கும்பாபிஷேகம் முன்னேற்பாடுகள் குறித்து அதிகாரிகளுடன் டிஐஜி நேரில் ஆய்வு

பெரிய கோயில் கும்பாபிஷேக முன்னேற்பாடுகள் குறித்து கோயிலின் பல்வேறு இடங்களில் நேற்று ஆய்வு செய்த தஞ்சாவூர் சரக காவல் துறை துணைத் தலைவர் ஜெ.லோகநாதன், பக்தர்கள் வந்து செல்லும் வழிகள் குறித்த வரைபடத்தைப் பார்த்து விளக்கம் கேட்டறிகிறார். உடன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.எஸ்.மகேஸ்வரன், தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் சி.பாபாஜி ராஜா பான்ஸ்லே உள்ளிட்டோர். (அடுத்த படம்) தஞ்சாவூர் பெரிய கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு திருச்சுற்று மாளிகையில் உள்ள சப்தகன்னியருக்கு நேற்று ‘மா காப்பு’ செய்யப்படுகிறது.

தஞ்சாவூர்

தஞ்சாவூர் பெரிய கோயிலில் வரும் பிப். 5-ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளதாகவும், அதற்கான பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு செய்து வருவ தாகவும் தஞ்சாவூர் சரக காவல் துறைத் துணைத் தலைவர் ஜெ.லோகநாதன் தெரிவித்தார்.

தஞ்சாவூர் பெரிய கோயிலில் கடந்த 1997-ம் ஆண்டு கும்பாபி ஷேகம் நடைபெற்றது. அதன்பிறகு 23 ஆண்டுகள் கழித்து கும்பாபி ஷேகம் நடத்துவதற்காக திருப்பணி கள் நடைபெற்று வருகின்றன.

கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த 2-ம் தேதி பாலாலயம் நடத்தப்பட்டு, மூலவர் உள்ளிட்ட சுவாமி சிலைகள் முன்பாக திரை யிடப்பட்டது. இதையடுத்து, தற்போது அனைத்து பூஜைகளும் உற்சவர் சுவாமிகளுக்கு மட்டுமே நடத்தப்படுகிறது.

மேலும், கும்பாபிஷேகத்துக்கு 8 கால யாகசாலை பூஜைகள் நடத்துவதற்கு ஏதுவாக கோயிலின் அருகே யாகசாலை பந்தல் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், நேற்று கோயி லின் சந்நிதி மற்றும் திருச்சுற்று மாளிகையில் உள்ள ஈசானமூர்த்தி, 252 சிவலிங்கங்கள், 12 விநாயகர் சிலைகள், 8 முருகன் சிலைகள் மற்றும் சப்த கன்னிகள் அடங்கிய சிலா மூர்த்திகளுக்கு ‘மா காப்பு’ (பச்சரிசி மாவு மற்றும் தயிர் ஆகிய வற்றைக் கொண்டு சிலைகளுக்கு போடப்படும் காப்பு) ஆகம விதிப்படி தொடங்கியது.

இதில், நேற்று 450 லிட்டர் தயிர், 200 கிலோ பச்சரிசி மாவு ஆகிய வற்றைக் கொண்டு சிலா மூர்த்தி களுக்கு ‘மா காப்பு’ செய்விக்கப் பட்டது. 2 நாட்கள் கழித்து ‘மா காப்பு’ அகற்றப்பட்டு, எண்ணெய்க் காப்பு சாத்தப்பட உள்ளது. இதில் தன்னார்வ தொண்டர்கள் பலர் கலந்துகொண்டனர்.

இதையடுத்து, தஞ்சாவூர் சரக காவல் துறைத் துணைத் தலைவர் ஜெ.லோகநாதன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.எஸ்.மகேஸ்வரன் ஆகியோர் நேற்று பெரிய கோயிலின் யாகசாலை பந் தல் அமைவிடம், வாகன நிறுத்தம் அமைக்க உள்ள இடம், கோயிலுக்கு முக்கிய விருந்தினர்கள் வரும் மற்றும் வெளியே செல்லும் வழி, பொதுமக்கள் வந்து செல்லும் வழிகள் ஆகியவற்றை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

அதன்பின் செய்தியாளர்களிடம் ஜெ.லோகநாதன் கூறியதாவது: தஞ்சாவூர் பெரிய கோயிலில் வரும் பிப்.5-ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதற்கான பாதுகாப்பு முன்னேற்பாடு பணி களை முதல் கட்டமாக ஆய்வு செய்து வருகிறோம்.

கோயிலுக்கு முக்கிய விருந்தினர்கள், பக்தர்கள் வந்து செல் லும் வழி, வாகனங்கள் நிறுத்து மிடத்தை தேர்வு செய்து வருகி றோம். கோயில் கோபுரம் வெளியே தெரிவதால், பக்தர்கள் கோயிலுக் குள் வருவதை காட்டிலும் வெளியே நின்று தரிசிப்பார்கள். கும்பாபிஷேக பாதுகாப்பு ஏற் பாடுகளை காவல் துறையினர் செய்து வருவதால், எவ்வளவு போலீ ஸாரை பாதுகாப்பு பணிக்கு வர வழைப்பது என்பது குறித்து பின் னர் தெரிவிக்கப்படும் என்றார்.

ஆய்வின்போது அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவ லர் சி.பாபாஜி ராஜா பான்ஸ்லே, தஞ்சாவூர் நகர காவல் துணை கண்காணிப்பாளர் எம்.ரவிச்சந் திரன் மற்றும் கோயில் பணியாளர் கள் உடனிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x