Last Updated : 09 Dec, 2019 12:37 PM

 

Published : 09 Dec 2019 12:37 PM
Last Updated : 09 Dec 2019 12:37 PM

விருதுநகரில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் வேட்புமனு தாக்கல் தொடங்கியது

விருதுநகர்

விருதுநகர் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் இரண்டு கட்டமாக நடத்தப்படுவதை ஒட்டி இன்று (திங்கள்கிழமை) வேட்புமனு தாக்கல் தொடங்கியது.

தமிழகத்தில் ஊரகப் பகுதிகளுக்கான உள்ளாட்சித் தேர்தல் வரும் 27, 30 தேதிகளில் நடைபெறுகிறது. உச்ச நீதிமன்றம் கடந்த 6-ம் தேதி வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில், உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் 27 மாவட்டங்களில் இரண்டு கட்டங்களாக டிசம்பர் 27 மற்றும் 30-ம் தேதிகளில் நடைபெறுகிறது.

9 மாவட்டங்கள் தவிர எஞ்சிய தேர்தல் அறிவிக்கப்பட்ட மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் இன்று தொடங்கியது.

மனுத் தாக்கல் செய்ய டிச.16-ம் தேதி கடைசி நாள் ஆகும். வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை 17-ம் தேதி நடைபெகிறது. வேட்பு மனுக்களை டிச.19-ம் தேதி வரை வாபஸ் பெறலாம்.

இந்நிலையில், விருதுநகர் மாவட்டத்தில் ஊராட்சித் தலைவர் பதவி, வார்டு உறுப்பினர் பதவி, ஒன்றிய உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட ஊராட்சி உறுப்பினர்களுக்கான வேட்புமனு தாக்கல் அந்தந்த ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் இன்று காலை தொடங்கியது.

ஒவ்வொரு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும் தற்போது வரை பலர் ஆர்வமாக வந்து மனுக்களை பெற்று செல்கின்றனர். அதையொட்டி விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 11 ஊராட்சி ஒன்றியங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டத்தில் வார்டுகளின் நிலவரம்:

(அருப்புக்கோட்டை )
ஒன்றிய வார்டுகள் = 15
ஊராட்சி தலைவர்கள் =32
கிராம ஊராட்சி வார்டுகள் =246

(விருதுநகர்)
ஒன்றிய வார்டுகள் = 25
ஊராட்சி தலைவர்கள் = 58
கிராம ஊராட்சி வார்டுகள் = 432

(காரியாபட்டி)
ஒன்றிய வார்டுகள் = 12
ஊராட்சி தலைவர்கள் = 36
கிராம ஊராட்சி வார்டுகள் =252

(திருச்சுழி)
ஒன்றிய வார்டுகள் = 15
ஊராட்சி தலைவர்கள் = 40
கிராம ஊராட்சி வார்டுகள் =282

(நரிக்குடி)
ஒன்றிய வார்டுகள் = 14
ஊராட்சி தலைவர்கள் = 44
கிராம ஊராட்சி வார்டுகள் =285

(ராஜபாளையம்)
ஒன்றிய வார்டுகள் = 24
ஊராட்சி தலைவர்கள் =36
கிராம ஊராட்சி வார்டுகள் = 312

(ஸ்ரீவில்லிப்புத்தூர்)
ஒன்றிய வார்டுகள் = 15
ஊராட்சி தலைவர்கள் = 29
கிராம ஊராட்சி வார்டுகள் =246

(வத்திராயிருப்பு )
ஒன்றிய வார்டுகள் = 13
ஊராட்சி தலைவர்கள் = 27
கிராம ஊராட்சி வார்டுகள் = 207

(சிவகாசி)
ஒன்றிய வார்டுகள் = 31
ஊராட்சி தலைவர்கள் = 54
கிராம ஊராட்சி வார்டுகள் = 429

(வெம்பக்கோட்டை)
ஒன்றிய வார்டுகள் = 20
ஊராட்சி தலைவர்கள் =48
கிராம ஊராட்சி வார்டுகள் = 360

(சாத்தூர்)
ஒன்றிய வார்டுகள் = 16
ஊராட்சி தலைவர்கள் =46
கிராம ஊராட்சி வார்டுகள் = 321

மாவட்ட ஊராட்சி வார்டுகள் 20

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x