Published : 08 Dec 2019 12:53 PM
Last Updated : 08 Dec 2019 12:53 PM
நேபாளத்தில் நடைபெற்று வருகின்ற 13 ஆவது தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவின் சார்பில் பளுதூக்கும் பிரிவில் பங்கேற்று தங்கம் வென்ற வீராங்கனை அனுராதாவுக்கு தமாகா தலைவர் ஜி.கே. வாசன் பாராட்டு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் ‘‘தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்ற தமிழகத்தைச் சேர்ந்த வீராங்கனை அனுராதா அவர்களுக்கு பாராட்டுக்கள். தொடர்ந்து சாதனைகள் படைக்க வாழ்த்துக்கள்.
தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்று தங்கம் வென்று சாதனை படைத்துள்ள தமிழகத்தைச் சேர்ந்த வீராங்கனை அனுராதா அவர்களுக்கு பாராட்டுக்கள்.
நேபாளத்தில் நடைபெற்று வருகின்ற 13 ஆவது தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவின் சார்பில் பளுதூக்கும் பிரிவில் பங்கேற்ற வீராங்கனை அனுராதா தங்கம் வென்றிருக்கிறார். குறிப்பாக 87 கிலோ எடைப்பிரிவில் கலந்து கொண்ட இவர் ஸ்நாட்ச் பிரிவில் 90 கிலோ எடையும், கிளீன் அண்ட் ஜெர்க் பிரிவில் 110 கிலோ எடையும் சேர்த்து மொத்தம் 200 கிலோ தூக்கியதால் முதல் இடம் பிடித்தார்.
இவர் தமிழகத்தின் புதுக்கோட்டை மாவட்டம் நெம்மேலிப்பட்டியைச் சேர்ந்தவர் என்பதால் தமிழக மக்களுக்கு பெருமையாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. இவர் தஞ்சை கோவூர் காவல் நிலைய உதவி ஆய்வாளராக பணியாறி வருவதும் குறிப்பிடத்தக்கது.
காவல்துறை பணியில் மக்கள் பணியாற்றிக் கொண்டே விளையாட்டிலும் ஆர்வமாக பங்கேற்று சாதனை படைத்திருப்பது தனிச்சிறப்பு. இதனால் தமிழக காவல்துறையும் பெருமை அடைகிறது.
தமிழக வீராங்கனைகள் உலக அளவில் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று சாதனை படைத்து வருவதற்கு வீராங்கனை அனுராதாவின் சாதனையும் போற்றுதலுக்குரியது.
பளு தூக்கும் போட்டியில் தமிழ்நாட்டின் முதல் தங்கம் வென்ற பெண் என்ற சிறப்பும் பெற்றிருக்கிறார். இது தமிழத்துக்கு பெருமை சேர்த்திருப்பது மட்டுமல்ல உலக அளவில் இந்தியாவின் விளையாட்டுத் திறமைக்கு கிடைத்திருக்கின்ற பரிசாகும்.
வீராங்கனை அனுராதாவின் விளையாட்டுக்கு ஊக்கம் அளித்து, உதவிக்கரமாக செயல்பட்ட பயிற்சியாளர்கள், குடும்பத்தினர் உள்ளிட்ட அனைவருக்கும் பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
வீராங்கனை அனுராதா விளையாட்டுச் சாதனையை பாராட்டி, அவர் மேலும் பல சாதனைகள் படைத்து தமிழகத்துக்கும், இந்திய நாட்டிற்கும் மேலும் பெருமை சேர்க்க வேண்டும் என்று சார்பில் வாழ்த்துகிறேன்’’ எனக் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT