Published : 07 Dec 2019 07:51 AM
Last Updated : 07 Dec 2019 07:51 AM
பெண் மருத்துவர் பிரியங்கா ரெட்டியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற 4 பேர் என்கவுன்ட்டர் செய்யப்பட்டதற்காக தெலங்கானா காவல் துறைக்கு தமிழகத்தின் அரசியல் கட்சித் தலைவர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக நேற்று வெளி யிட்ட அறிக்கையில் அவர்கள் கூறி யிருப்பதாவது:
தேமுதிக பொருளாளர் பிரேம லதா விஜயகாந்த்: பெண் மருத் துவர் பிரியங்கா ரெட்டியை பாலி யல் வன்கொடுமை செய்து எரித்துக் கொலை செய்த 4 கொடிய வர்களை தெலங்கானா காவல் துறை என்கவுடன்ட்டர் செய்திருப்பது வர வேற்கத்தக்கது. இதுபோன்ற கடுமையான தண்டனைகள் மூலம் தான் பெண்களுக்கு எதிரான பாலி யல் குற்றங்களைத் தடுக்க முடியும்.
புதுச்சேரி முதல்வர் நாராயண சாமி: ஹைதராபாத்தில் மருத்துவரை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்தோரை காவல்துறையி னர் என்கவுன்ட்டர் செய்து சுட்டுக் கொன்றது இறைவன் அளித்த தண் டனை. இதன்மூலம் தவறிழைப்போர் பாடம் கற்கவேண்டும். புதுச்சேரி யிலும் பெண்களின் பாதுகாப் புக்கு தேவையான நடவடிக்கை களை எடுக்க வேண்டும் என காவல்துறைக்கு உத்தரவிட்டுள் ளேன்.
தமாகா தலைவர் ஜி.கே.வாசன்: பாலியல் தொல்லை கொடுப்பவர் களுக்கும், பாலியல் வன்கொடுமை யில் ஈடுபடுபவர்களுக்கும் அதிகபட்ச தண்டனை கொடுக்க வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து கிடையாது. இதுபோன்ற செயல் களில் ஈடுபடுபவர்களை அடையாளம் கண்டு, காலம் தாழ்த்தாமல் தண் டனையை உடனடியாக வழங்கப் படும் நிலையை மத்திய அரசு ஏற்படுத்த வேண்டும்.
சமக தலைவர் சரத்குமார்: ஹைதராபாத்தில் பெண் மருத்துவர் பிரியங்கா ரெட்டியை பாலியல் வன்கொடுமை செய்து எரித்துக் கொன்றவர்களை காவல் துறையினர் என்கவுன்ட்டர் செய்திருப்பது பாராட்டுக்குரியது. பாலியல் வன் கொடுமைகளைத் தடுக்க இது போன்ற கடுமையான நடவடிக்கை கள் அவசியம்.
புதிய நீதிக் கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம்: பெண் மருத்துவர் பிரியங்கா ரெட்டியை பாலியல் வன்கொடுமை செய்து எரித்துக் கொன்ற 4 பேரை தெலங்கானா காவல் துறையினர் சுட்டு வீழ்த்தியிருப்பது பாராட்டுக்குரியது. பெண்களுக்கு எதிரான பாதகச் செயல்களில் ஈடுபட நினைப்போருக்கு விடுக்கப்பட்ட அபாய எச்சரிக்கையாக இது அமையும்.
அகில இந்திய மூவேந்தர் முன் னணிக் கழகத் தலைவர் ந.சேது ராமன்: பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் கொடூரங்களுக்கு சரியான தண்டனை எது என்பதை ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் தெலங் கானா காவல் துறை உணர்த்தி யுள்ளது.
காங்கிரஸ் எம்.பி. திருநாவுக் கரசர்: பெண் மருத்துவரை பாலியல் பலாத்காரம் செய்து எரித்த 4 குற்ற வாளிகளை தண்டிக்க வேண்டியது தான். அதற்காக சாலையில் வைத்து சுட்டுத்தள்ளுவதை ஏற்க முடியாது. இதுபோன்ற குற்றங்களில் ஈடு படுபவர்கள் சட்டங்கள் மூலம் தண்டிக்கப்பட வேண்டும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment