Published : 14 May 2014 10:28 AM
Last Updated : 14 May 2014 10:28 AM

‘ஏன் உயிருடன் இருக்கிறாய், செத்து தொலை..!’ இது தற்கொலைக்கு தூண்டும் வார்த்தையல்ல: உயர் நீதிமன்ற மதுரை கிளை கருத்து

“ஏன் உயிருடன் இருக்கிறாய்..? செத்து தொலை..” என்று கூறி யதை தற்கொலைக்கு தூண்டிய தாக எடுத்துக் கொள்ள முடி யாது என உயர் நீதிமன்றம் தெரிவித் துள்ளது.

தூத்துக்குடியைச் சேர்ந்தவர் ஆரோக்கியசாமி. இவரது மனைவி கிறிஸ்டினா. இவர்களுக்கு ஜோசப் பின், மோனிஷா என்ற இரு மகள் கள் உள்ளனர்.

ஆரோக்கியசாமி கடை வைத் துள்ளார். அங்கு பணிபுரிந்த தேவி என்ற பெண்ணை திரு மணம் செய்யப் போவதாக கிறிஸ்டி னாவிடம் கூறியுள்ளார். இதனால் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. 2002 அக்டோபர் 30-ம் தேதி கிறிஸ்டினா, ஜோசப்பின், மோனிஷா ஆகியோர் பாஸ்பரஸ் சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டனர். தற்கொலைக்கு முன் சிறுமி ஜோசப்பின், தன் தாய் மாமாவுக்கு ஒரு கடிதம் எழுதி யுள்ளார். அதில், அம்மாவை ஏன் உயிருடன் இருக்கிறாய்? செத்து தொல.. என்று அப்பா திட்டி னார். அதனால், தற்கொலை செய்து கொள்கிறோம் என எழுதப்பட்டிருந்தது. தூத்துக் குடி தெற்கு போலீஸார் தற் கொலைக்குத் தூண்டியதாக வழக்குப் பதிந்து ஆரோக்கிய சாமியைக் கைது செய்தனர்.

இந்த வழக்கில் ஆரோக்கிய சாமிக்கு, 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கி 2005 நவம்பர் 29-ம் தேதி தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

தீர்ப்பை எதிர்த்து ஆரோக்கிய சாமி உயர் நீதிமன்றக் கிளையில் மேல்முறையீடு மனுதாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்து நீதிபதி பி.என். பிரகாஷ் பிறப்பித்த உத்தரவு: இந்த வழக்கில் சிறுமி ஜோசப்பின் கடிதம் முக்கிய சாட்சியாக உள்ளது. 5-ம் வகுப்பு படிக்கும் பத்து வயது சிறுமி, தற்கொலை செய்வது குறித்தும், அதற்கு அடுக்கடுக்கான காரணங்களைக் கூறியும் கடிதம் எழுதியிருப்பார் என்பதை கற்பனை செய்துகூட பார்க்க முடியவில்லை. அந்தக் கடிதத்தில் இருப்பது சிறுமியின் கையெழுத்துதானா என்பதை ஆய்வு செய்யவில்லை. ஏன் உயிருடன் இருக்கிறாய்? செத்து தொல.. என்ற வார்த்தைகளை பொதுவாக கோபம் வரும்போது சொல்வது வழக்கம். அவ்வாறு கூறியதற்காக ஒருவர் மீது தற்கொலைக்குத் தூண்டியதாக வழக்குப் பதிய முடியாது. எனவே, மனுதாரருக்கு கீழ் நீதிமன்றம் வழங்கிய தண்டனை ரத்து செய்யப்படுகிறது.

இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x