Published : 28 Mar 2014 12:44 PM
Last Updated : 28 Mar 2014 12:44 PM
நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரோ அல்லது பதிவு பெற்ற அரசியல் கட்ச யினரோ நாளிதழ், தொலைக்காட்சி உள்ளிட்ட ஊடகங்களில் விளம்பரம் செய்ய, மூன்று நாட்களுக்கு முன்பு விண்ணப்பித்து அனுமதி பெற வேண்டும் என, ஆட்சியர் உத்தர விட்டுள்ளார்.
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், கேபிள் டிவிக்களில் தேர்தல் விளம்பரம் ஒளிபரப்புவது குறித்த ஆலோசனைக் கூட்டம், ஆட்சி யர் வீரராகவ ராவ் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து, ஆட்சியர் தெரிவித்ததாவது:
தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள காலங்களில் மாவட்ட தேர்தல் அலுவலரின் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள ஊடக சான்றளித்தல் மற்றும் கண்காணிப்புக் குழுவிடம் சான்றிதழ்கள் பெறப்பட்டுள்ள விளம்பரங்கள் மட்டுமே ஒலி, ஒளிபரப்பப்பட வேண்டும். அவ்வாறு அனுமதி பெறாத எந்தவொரு விளம்பரத்தினையும் ஊடகத்தில் ஒலி, ஒளிபரப்ப அனுமதிக்கக் கூடாது.
தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரோ அல்லது பதிவு பெற்ற அரசியல் கட்சியோ தங்களின் விளம்பரங்களை கண்டிப்பாக மாவட்ட தேர்தல் அலுவலரின் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள ஊடக சான்றளித்தல் மற்றும் கண்காணிப்புக் குழுவிடம், மூன்று நாள்களுக்கு முன்னதாக விண்ணப்பித்து சான்றிதழ் பெறப்பட்டிருக்க வேண்டும். இந்த விதிமுறைகளை மீறுபவர்கள் மீது சிறைத் தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும்.
இவ்வாறு ஆட்சியர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT