Published : 12 May 2014 10:33 AM
Last Updated : 12 May 2014 10:33 AM
சென்னையில் பாலங்கள், சுரங்கப் பாதைகள் ஆகியவை குப்பை கொட்டும் இடங்களாகவும், பிச்சைக் காரர்களின் புகலிடமாகவும், சட்ட விரோத வாகன நிறுத்துமிடங் களாகவும் மாறி வருகிறது.
சென்னையில் கூவம், பக்கிங் காம் கால்வாய், அடையாறு, ஓட்டேரி நல்லா ஆகிய ஆறு களும், கேப்டன் காட்டன், விருகம் பாக்கம், மாம்பலம் ஆகிய சிறு கால்வாய்களும் உள்ளன. இந்த நீர்வழிகளின் இருபக்கங்களில் உள்ள பகுதிகளை இணைக்க பாலங்கள் கட்டப்பட்டுள்ளன.
சென்னையில் தற்போது 262 பாலங்கள் உள்ளன. 65 உயர்மட்ட பாலங்கள், 31 பெட்டக வடிவிலான சிறு பாலங்கள், 81 சிறுபாலங்கள், 11 ரயில்வே மேம்பாலங்கள், 14 வாகன சுரங்கப் பாதைகள், 6 தரைமட்டப் பாலங்கள், 35 நடைபாலங்கள், பாதசாரிகளுக்கான 6 சுரங்கப் பாதைகள், 13 மேம்பாலங்கள் ஆகியன சென்னை மாநகராட்சியின் பராமரிப்பில் உள்ளன.
இவற்றில் பெரும்பாலான பாலங் களின் கீழ்பகுதி, குப்பைகளால் குப்பை கொட்டும் இடங்களாகவும், பிச்சைக்காரர்களின் வசிப்பிடங் களாகவும் மாறிவருகிறது. அதோடு சில இடங்களில் தனியார் நிறுவ னங்களின் வாகனங்களை நிறுத்தும் இடமாகவும், சிறு கடைகளை வைக்கும் இடமாகவும் பயன் படுத்தப்பட்டு வருகிறது.
நீண்டகாலமாக இருந்து வரும் இப்பிரச்சினை குறித்து சென்னை மாநகராட்சி பாலங்கள் துறை அதிகாரியிடம் கேட்டபோது, “பாலங்களை தூய்மையாகப் பராமரிக்கும் திட்டத்தின் ஒருபகுதி யாக ‘வாகன நிறுத்தத்தை நிர்வகிக் கும் முறை’ என்ற புதிய திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. அடுத்த 2 மாதங்களில் இப்புதிய முறை அமல்படுத்தப்படும். அதன்பிறகு மேம்பாலங்களின் அடிப்பகுதி ஆக்கிரமிப்பில் இருந்து முழுமை யாக மீட்கப்பட்டு, மாநகாரட்சியின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்படும். அப்போது மேம்பாலங் கள் மேம்படுத்தப்பட்டு, போக்கு வரத்துக்கு இடையூறு இல்லாத வகையில் வாகன நிறுத்தமும் சீராக்கப்படும்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT