Published : 05 Dec 2019 12:16 PM
Last Updated : 05 Dec 2019 12:16 PM

முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சகோதரர் திமுகவில் இணைந்தார்: அதிமுக மக்களுக்கு எதுவும் செய்யவில்லை என புகார்

சென்னை

முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் பெரியம்மா மகன் ஸ்டாலின் முன்னிலையில் தன்னை திமுகவில் இணைத்துக்கொண்டார். அதிமுக மக்களுக்காக எதையும் செய்யவில்லை என்பதால் தாம் ஸ்டாலின் தலைமையை ஏற்பதாக தெரிவித்துள்ளார்.

அண்ணா அறிவாலயத்தில் வேறொரு நிகழ்வுக்காக காத்திருந்த செய்தியாளர்களுக்கு திடீர் ஆச்சர்யம். முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தோற்றத்துடன் சற்றே கலர் சற்று கம்மியாக ஒருவர் காரிலிருந்து இறங்கிச் சென்றார். அவரது நடை உடை பாவனை முதல்வர் எடப்பாடி பழனிசாமியைப்போலவே இருந்ததால் செய்தியாளர்கள் அவரிடம் சென்று தாங்கள் யார் என விசாரித்தனர்.

அப்போது அவர் சொன்ன தகவல் கேட்டு செய்தியாளர்கள் தங்கள் கணிப்பு சரிதான் என உறுதிப்படுத்திக்கொண்டனர். முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சொந்த பெரியம்மாவின் மகன், அவரது சகோதரர், நானும் அதிமுகவில்தான் இருக்கிறேன். சேலம் மாவட்டம் நடுங்குலம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவராக இருந்தவன் என தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டுள்ளார்.

அவரது பெயர் விஸ்வநாதன் என்பதும் அவரது மகன்கள் ரஞ்சித், கார்த்தி அகியோருடன் திமுகவில் இணைய வந்துள்ளதாக தகவல் தெரிவித்துள்ளார். உள்ளேச்சென்ற அவர் திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.

விஸ்வநாதன் நெடுங்குளம் ஊராட்சி மன்ற தலைவராகவும், அதிமுக ஒன்றிய செயலாளராக இருந்தவர். இவர் தனது அண்ணனான முதல்வர் பழனிசாமி மீதும், கட்சி மீதும் அதிருப்தியில் இருந்து வந்துள்ளார். மக்கள் நலனில் அக்கறை இல்லாத அரசாக தமிழக அரசு செயல்படுகிறது, அதிமுகவில் ஜனநாயகம் இல்லை என்பதால் திமுகவில் இணைந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x