Published : 04 Dec 2019 08:14 AM
Last Updated : 04 Dec 2019 08:14 AM
மாநகராட்சி மேயர், நகராட்சி மற்றும் பேரூராட்சித் தலைவர் பதவி களுக்கு மறைமுகத் தேர்தல் நடத்துவதை எதிர்த்து தொடரப் பட்ட வழக்கில் சட்டப்பூர்வமான காரணங்களுடன் கூடுதல் மனு தாக்கல் செய்ய மனுதாரருக்கு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
உள்ளாட்சி அமைப்புகளில் மாநகராட்சி மேயர், நகராட்சித் தலைவர், பேரூராட்சித் தலைவர் போன்ற பதவிகளுக்கு மறைமுகத் தேர்தல் நடத்தப்படும் என தமிழக அரசு அவசர சட்டம் கொண்டு வந்தது. இதை எதிர்த்து யேசுமணி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத் தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணை நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், ஆர்.ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வில் நடந்தது. அப்போது மாநகராட்சி மேயர், நகராட்சித் தலை வர் போன்ற பதவிகள் நேரடித் தேர்தல் மூலம் தேர்வு செய்யப் பட்ட நிலையில், தற்போது அரசி யல் ஆதாயத்துக்காக மறைமுகத் தேர்தல் நடத்த திட்டமிட்டுள்ளதாக வும், இது அரசியலமைப்பு சட்டத் துக்கு விரோதமானது எனவும் மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.
அதை ஏற்க மறுத்த நீதிபதி கள், இதற்கு முன்பாகவும் தமிழகத் தில் மறைமுகத் தேர்தல் மூலமாக உள்ளாட்சி அமைப்புகளுக்கு தலைவர்கள் தேர்வு செய்யப்பட்டுள் ளனர். மனுதாரரின் மனுவில் இந்த அவசர சட்டத்தை எதிர்ப்பதற்கான சட்டப்பூர்வமான காரணங்கள் எதையும் கூறவில்லை. எனவே மனுதாரர் இதுதொடர்பாக கூடுதல் மனுவை தாக்கல் செய்யலாம், என அறிவுறுத்தி விசாரணையை டிச.17-க்கு தள்ளிவைத்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT