Published : 04 Dec 2019 06:55 AM
Last Updated : 04 Dec 2019 06:55 AM
விருத்தாசலம்
தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச் சாவடிகளில் வாகனங்களின் கால விரயத்தை குறைக்கும் வகை யில் தானியங்கி முறையில் கட்ட ணம் வசூலிக்கும் ‘பாஸ்டேக்’(Fas tag) முறையை தேசிய நெடுஞ் சாலைத் துறை அறிமுகப்படுத் தியது.
தொடக்கத்தில் ஒரு வழியில் மட்டுமே நடைமுறைப்படுத்தப்பட்ட தானியங்கி கட்டண வசூல் முறை, தற்போது சுங்கச் சாவடிகளில் உள்ள அனைத்து நுழைவுகளிலும் நடைமுறைப்படுத்தப்பட்டு டிச.1-ம் தேதி முதல் அனைத்து வாகனங் களிலும் தானியங்கி முறைப்படியே கட்டணம் வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலை யில் வாகனங்களில் தானியங்கி மின்னணு அட்டை பொருத்துவதற் கான கால அவகாசம் டிச.15-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து வாகன ஓட்டி களும், உரிமையாளர்களும் தங் கள் வாகனங்களுக்கான பாஸ் டேக் மின்னணு அட்டை பொருத் தும் நடவடிக்கைகளில் தீவிரம் காட்டி வருகின்றனர்.
அதன்படி பாஸ்டேக்கை வாகன ஓட்டிகளுக்கு வழங்க சில வங்கிகளுக்கு அங்கீகாரம் வழங்கி யுள்ள தேசிய நெடுஞ்சாலைத் துறை, வங்கிகளில் ஆதார் அட்டை, வாகன பதிவுச் சான்றிதழ், வாகனத்தின் வண்ண புகைப்படம், ஓட்டுநர் உரிமம் உள்ளிட்டவற்றின் நகல், டேக் வைப்புத்தொகை ரூ.200 மற்றும் வாகன பயன்பாட்டு கட்டணம் ரூ.300 என மொத்தமாக ரூ.500 செலுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது.
இதைத்தொடர்ந்து வாகன ஓட்டி கள் அதற்கென அங்கீகரிக்கப்பட்ட வங்கிகளுக்கு கடந்த சில தினங் களாக அலைந்து கொண்டிருக்கின் றனர். இருப்பினும் டேக் கிடைக்க வில்லை.
இதுதொடர்பாக கள்ளக்குறிச் சியைச் சேர்ந்த வாகன ஓட்டி வெங்கடேசன் என்பவரிடம் விசா ரித்தபோது, “பாஸ்டேக் அட்டைக் காக விண்ணப்பித்துவிட்டேன். இதுவரை டேக் வழங்கப்பட வில்லை. வங்கியில் கேட்டதற்கு தீர்ந்துவிட்டதாகவும், ஒரு வாரத்துக்குள் வந்துவிடும் என்றும் கூறுகின்றனர். தேவை எவ்வளவு என்பதை உணராமலேயே அவசர கதியில் அறிவித்துவிட்டு, வாகன ஓட்டிகளை நெருக்குவது எந்த விதத்தில் நியாயம்?” என்றார்.
இதற்கென அங்கீகரிக்கப்பட்ட தனியார் வங்கி மேலாளரிடம் விசா ரித்தபோது, “தற்போது அதிக அளவில் வாடிக்கையாளர்கள் ஒரே நேரத்தில் விண்ணப்பித்துள் ளதால்தான் இந்த நிலை. 4 தினங் களுக்குள் டேக் வந்துவிடும். அது வரை அவர்கள் பொறுத்திருக்க வேண்டும்” என்றார்.
இதுதொடர்பாக தேசிய நெடுஞ் சாலைத் துறை திட்ட இயக்குநர் ரவிச்சந்திரனிடம் கேட்டபோது, “சில இடங்களில் தட்டுப்பாடு நிலவு கிறது. தட்டுப்பாடு நிலவுவதால், ஐஹெச்என்பிஎல் (IHNPL) என்ற நிறுவனம் டேக் விநியோகிக்க உள் ளது. எனவே ஓரிரு தினங்களில் நிலைமை சீரடையும்” என்றார்.
உளுந்தூர்பேட்டையை அடுத்த செங்குறிச்சி சுங்கச்சாவடி மேலாளர் ஜோகேஷிடம் கேட்டபோது, “விரை வில் எங்கள் டோல் பிளாசாவுக்கு வரவேண்டிய டேக் வந்துவிடும்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT