Published : 03 Dec 2019 10:50 AM
Last Updated : 03 Dec 2019 10:50 AM
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதியில் பெய்த கனமழையால், இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 4 மணியளவில் இல்லத்தார் வடக்கு தெருவில் அடுத்தடுத்து இரண்டு வீடுகள் இடிந்து விழுந்தன.
இந்த விபத்தில் இருவர் படுகாயமடைந்த நிலையில், நல்வாய்ப்பாக உயிர்ச் சேதம் ஏதும் ஏற்படவில்லை.
விபத்தில் சிக்கிய இரண்டு வீடுகளில் ஒரு வீட்டில் இருந்த லெட்சுமணன் மற்றும் அவரது மகன் மாரியப்பன் ஆகிய இருவருக்கும் காயங்கள் ஏற்பட்டது. அவர்கள் இருவரும் பத்திரமாக மீட்கப்பட்டு அம்பை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அதே வீட்டில் தாயும், மகளும் வேறு ஓர் அறையில் உறங்கியதால் விபத்தில் சிக்காமல் தப்பினர்.
அதே வேளையில் பக்கத்திலிருந்த கந்தசாமி வீடு முழுமையாக சேதமடைந்தது. ஆனால் வீட்டில் யாரும் இல்லாததால் நல்வாய்ப்பாக உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது.
இதேபோல், கனமழையால் அம்பை - வி.கே.புரம் செல்லும் சாலையில் முறிந்து விழுந்த சாலையோர பெரிய மரத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து தற்போது வருவாய்துறையினர் நேரில் வந்து மரத்தை அறுத்து சாலை போக்குவரத்தை சரிசெய்து வருகின்றனர்.
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், நெல்லையில் கடந்த 2 நாட்களாகவே கனமழை பெய்து வருகிறது. இதனால் அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.
இன்று காலை நிலவரப்படி அணைகளின் நீர் அளவு:
பாபநாசம் :
உச்சநீர்மட்டம் : 143 அடி
நீர் இருப்பு : 141.25 அடி
நீர் வரத்து : 2,348.22 கன அடி
வெளியேற்றம் : 2,934.33 கன அடி
சேர்வலாறு :
உச்ச நீர்மட்டம் : 156 அடி
நீர் இருப்பு : 145.14 அடி
நீர்வரத்து : -
வெளியேற்றம் : -
மணிமுத்தாறு :
உச்ச நீர்மட்டம்: 118 அடி
நீர் இருப்பு : 96.40 அடி
நீர் வரத்து : 1531 கனஅடி
வெளியேற்றம் : -
காலை 8 மணி நிலவரப்பட்டி நெல்லை மாவட்ட மழை அளவு:
பாபநாசம்: 27 மி.மீ
சேர்வலாறு: 18 மி.மீ
மணிமுத்தாறு: 34.2 மி.மீ
நம்பியாறு: 13 மி.மீ
கொடுமுடியாறு: 10 மி.மீ
அம்பாசமுத்திரம்: 49 மி.மீ
சேரன்மகாதேவி: 23 மி.மீ
நாங்குநேரி: 14.50 மி.மீ
பாளையங்கோட்டை: 8 மி.மீ
ராதாபுரம்: 7 மி.மீ
நெல்லை: 7 மி.மீ
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT