Published : 01 Dec 2019 10:32 AM
Last Updated : 01 Dec 2019 10:32 AM
திருநெல்வேலி மாவட்டத்தில் நேற்று பிற்பகல் தொடங்கி இரவு வரை நீடித்த மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
திருநெல்வேலி மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு தொடங்கி காலை வரையிலும், நேற்று பிற்பகல் தொடங்கி இரவு வரையிலும் தொடர்ச்சியாக மழை பெய்தது. பாபநாசம் அணைப்பகுதியில் மட்டும் நேற்று காலை 8 மணி நிலவரப்படி 110 மி.மீ. மழை பெய்திருந்தது. ஏற்கெனவே அணை நிரம்பியிருந்த நிலையில் அணைக்கு நீர்வரத்து அதிகரித்ததால், 14,270 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இதனால் கல்யாண தீர்த்தம், அகஸ்தியர் அருவிகளில் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டியது.
படித்துறைகள் மூழ்கின
தாமிரபரணி ஆற்றில் நேற்று கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட் டது. பாபநாசம் படித்துறை மூழ்கி யது. அம்பாசமுத்திரம், கல்லிடைக் குறிச்சி, சேரன்மகாதேவி பகுதி களில் ஆற்றங்கரையோர படித் துறைகள், திருநெல்வேலியில் தைப்பூச மண்டபம், படித்துறைகள் மூழ்கின. திருநெல்வேலி குறுக்குத் துறை முருகன் கோயில் மண்டபம் மற்றும் கோபுரம் மூழ்கும் அள வுக்கு வெள்ளம் கரைபுரண்டது. தாமிரபரணியில் வெள்ளம் காரண மாக, திருநெல்வேலி மீனாட்சி புரத்தில் ஆற்றங்கரையோரத்தில் வசிப்பவர்கள் அனைவரும் தங்கள் வீடுகளைவிட்டு வெளியேறி, பாது காப்பான இடங்களுக்கு சென்ற னர். கருப்பந்துறை ஆற்றுப்பாலம் மூழ்கியதால் அவ்வழியாக போக்கு வரத்து தடை செய்யப்பட்டது.
திருநெல்வேலி, பாளையங் கோட்டை நகரில் சாலையோரங் களும், தாழ்வான பகுதிகளும் வெள்ளக்காடானது. இதனால் பல்வேறு இடங்களில் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது. பல இடங்களில் மின்தடை ஏற்பட் டது. மாலையில் பள்ளி முடிந்த தும் வீடுகளுக்கு திரும்ப முடியாமல் மாணவ, மாணவியர் அவதியுற்றனர்.
நம்பியாற்றில் வெள்ளம்
திருநெல்வேலி மாவட்டத்தில் முக்கிய அணையான மணிமுத்தாறு அணைக்கு நேற்று காலையில் விநாடிக்கு 3,989 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணை நீர்மட்டம் நேற்று ஒரே நாளில் 4 அடி உயர்ந்து 84.80 அடியாக இருந்தது. களக்காட்டில் நாங்குநேரியன் கால்வாய், பச்சையாறு, உப்பாறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
களக்காடு- சிதம்பராபுரம் செல்லும் சாலையில் நாங்குநேரி யன் கால்வாயிலுள்ள தரைப்பாலம் மூழ்கியது.
இதனால் அவ்வழியாக போக்குவரத்து தடை செய்யப் பட்டது. திருக்குறுங்குடி நம்பி யாற்றிலும் வெள்ளம் கரைபுரண் டது. திருமலைநம்பி கோயிலுக்கு செல்லும் வழியிலுள்ள பாலம் மூழ்கியது. கோயிலுக்கு செல்ல வனத்துறை தடைவிதித்துள்ளது.
மழை அளவு
திருநெல்வேலி மாவட்டத்தில் பெய்த மழையளவு (மி.மீட்டரில்): பாபநாசம்- 110, சேர்வலாறு- 73, மணிமுத்தாறு- 65.4, நம்பியாறு- 50, கொடுமுடியாறு- 45, கடனாநதி- 35, நாங்குநேரி- 35, சேரன்மகாதேவி- 33, கருப்பாநதி- 46, களக்காடு- 46.4, அம்பாசமுத்திரம்- 41.4, ராதாபுரம்- 78, பாளையங்கோட்டை- 38.6, திருநெல்வேலியில் 34 மி.மீ மழை பெய்துள்ளது.
உவரி, இடிந்தகரை உள்ளிட்ட 10 மீனவ கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான நாட்டுப்படகு மீனவர்கள் நேற்று மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை
திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் நேற்று மாலை 4 மணிக்கு பதிவான மழை யளவு (மி.மீட்டரில்): திருநெல் வேலி- 40, பாளையங்கோட்டை- 20, ராதாபுரம்- 21, பாபநாசம்- 12, அம்பாசமுத்திரம்- 1.30, சேரன் மகாதேவி- 3.20, மணிமுத்தாறு- 7.80, நாங்குநேரி- 9, சங்கரன்கோவில்- 4, செங்கோட்டை- 21, சிவகிரி- 3.30, தென்காசியில் 12.10 மி.மீ மழை பதிவானது.
தாமிரபரணியில் குளிக்க வேண்டாம்
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் அறிக்கை: பாபநாசம் அணையானது முழு கொள்ளளவை எட்டியிருப்பதால் அணையிலிருந்து விநாடிக்கு 14 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. மேலும் நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் தண்ணீர் வரத்து மேலும் அதிகரிக்க கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள், சுற்றுலா பயணிகள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும். தாமிரபரணி ஆற்றில் யாரும் குளிக்க வேண்டாம். தகவல் மற்றும் உதவி தேவைப்படுவோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையின் கட்டணமில்லா தொலைபேசி எண் 1077 மற்றும் 2501070 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment