Published : 01 Dec 2019 08:32 AM
Last Updated : 01 Dec 2019 08:32 AM

சென்னைக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் அதிகாரிகள் தயார் நிலையில் இருப்பது அவசியம்: மாநகராட்சி அறிவுறுத்தல்

சென்னைக்கு கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ள நிலையில், பேரிடர் கட்டுப்பாட்டறை செயல்பட்டு வரும் ரிப்பன் மாளிகை வளாகத்தில் உள்ள ஜெனரேட்டர்களுக்கு டீசல் நிரப்பும் பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள்.படம்: ச.கார்த்திகேயன்

சென்னை

சென்னைக்கு கனமழை எச்ச ரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலை யில், அனைத்து நிலை கள அலு வலர்களும் தயார் நிலையில் இருக்க மாநகராட்சி நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

சென்னையில் கடந்த 2015-ம் ஆண்டு நவம்பர் 30-ம் தேதி பெய்த அதிகனமழைக்குப் பிறகு, குறிப் பிடும்படியாக மழை பெய்ய வில்லை. இந்நிலையில் இந்த ஆண்டு அதே நாளில் சென்னையில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வுமையம் எச்சரிக்கை விடுத் துள்ளது.

இதனால், மாநகராட்சி தலைமை நிர்வாகம், அனைத்து நிலை கள அலுவலர்களும் பருவமழையை எதிர்கொள்ள தயார் நிலையில் இருக்குமாறு நேற்று அறிவு றுத்தியுள்ளது. மேலும், மாநகராட்சி தலைமையகமான, பேரிடர் கட்டுப்பாட்டு அறை செயல்பட்டு வரும் ரிப்பன் மாளிகை வளாகத்தில் உள்ள ஜெனரேட்டர்களுக்கு டீசல் நிரப்பும் பணிகளும் நேற்று மேற்கொள்ளப்பட்டன.

இதுதொடர்பாக சென்னை மாந கராட்சி அதிகாரிகள் கூறியதாவது:

சென்னை மாநகராட்சியில் தாழ் வான பகுதிகளில் தேங்கி நிற்கும் மழைநீரை வெளியேற்ற 50, 25, 10 மற்றும் 5 குதிரைத் திறன் கொண்ட 570 மோட்டார் பம்புகள், 130 ஜென ரேட்டர்கள், 371 மர அறுவை இயந் திரங்கள், 6 மரக்கிளை அகற்றும் இயந்திரங்கள் ஆகியவை தயார்நிலையில் உள்ளன.

மழைக்காலங்களில் தாழ்வான பகுதிகளில் உள்ள மக்களை மழை வெள்ளத்தில் இருந்து காப்பாற்றும் பொருட்டு 109 இடங்களில் படகுகளும், பொதுமக்களை தங்க வைக்க 176 நிவாரண மையங்களும், 4 பொது சமையல் அறைகளில் 1,500 பேருக்கு சமையல் செய்ய தேவையான பொருட்கள், பொதுமக்களுக்கு குடிநீர் வழங்க 50 இடங்களில் அம்மா குடிநீர் மையங்களும், மழைக்காலத்தில் ஏற்படும் தொற்றுகளில் இருந்து பொதுமக்களை பாதுகாக்க 44 நிலையான மற்றும் நடமாடும் மருத் துவக் குழுக்களும், 52 இடங்களில் பேரிடர் மீட்புக் குழுக்களும் தயார்நிலையில் உள்ளன.

பருவமழையின்போது சாலை களில் விழுந்த மரங்களை உடனடி யாக அகற்ற மண்டலத்துக்கு 1 இரவு பணிக் குழுவும், 18 உயர் கோபுர விளக்குகளும் தயார்நிலையில் உள்ளன.

மேலும், அனைத்து சுரங்கப் பாதைகள், மாநகராட்சி அலுவலகங் களில் உள்ள ஜெனரேட்டர்களில் போதிய டீசல் நிரப்பவும், போதிய அளவு இருப்பு வைத்திருக்க வும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அனைத்து சாலைகளிலும் மழைநீர் தேக்கத்தை உடனுக்குடன் சரி செய்யவும், ஆள் நுழைவு குழி கள் மூடப்பட்டிருப்பதை உறுதி செய்யவும், சாலைகளில் உள்ள பள்ளங்களை சரி செய்யவும், மரங்கள் ஏதேனும் விழுந்திருந்தால் உடனடியாக அகற்றவும் கள அலுவலர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.

இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x