Last Updated : 30 Nov, 2019 09:30 AM

 

Published : 30 Nov 2019 09:30 AM
Last Updated : 30 Nov 2019 09:30 AM

பாலாலயத்துக்கான யாகசாலை பூஜை தொடங்கிய நிலையில் தஞ்சாவூர் பெரிய கோயில் கும்பாபிஷேக தேதியை அறிவிப்பதில் தயக்கம் ஏன்? - திட்டமிட்டபடி நடைபெறுமா என மக்கள் சந்தேகம்

தஞ்சாவூர்

தஞ்சாவூர் பெரிய கோயிலின் கும்பா பிஷேக திருப்பணிகள் கடந்த 2 ஆண்டுகளாக நடைபெற்று முடிந் துள்ள நிலையில், கும்பாபிஷேகத் துக்கான பாலாலய யாகசாலை பூஜைகள் தொடங்கியும் கும்பாபி ஷேகத்துக்கான தேதி அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்படாததால் கும்பாபிஷேகம் நடைபெறுமா என்ற சந்தேகம் பக்தர்களிடம் எழுந்துள்ளது.

பாரம்பரியமும், கலாச்சாரத் தொன்மையும் உடைய பெரிய கோயிலை இந்திய தொல்லியல் துறை பராமரித்து வருகிறது. கோயிலின் பூஜைகள் உள்ளிட்ட வழிபாட்டு முறைகளை தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானமும், அறநிலையத் துறையும் நிர்வகித்து வருகின்றன.

இந்நிலையில் கடந்த 1997-ம் ஆண்டு தஞ்சாவூர் பெரிய கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. ஆகம விதிகளின்படி 12 ஆண்டு களுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் நடத்த வேண்டும். ஆனால், பல் வேறு காரணங்களால் பெரிய கோயில் கும்பாபிஷேகம் நடை பெறாமல் தாமதமாகி வந்தது.

இதையடுத்து பக்தர்களின் வேண்டுகோளை ஏற்று இந்திய தொல்லியல் துறையினர் கடந்த 2 ஆண்டுகளாக கேரளாந்தகன், ராஜராஜன், மராட்டா நுழைவு வாயில்களைச் சுத்தம் செய்தனர். கடந்த 6 மாதங்களுக்கு முன் விமான கோபுர திருப்பணி தொடங்கியது.

இத் திருப்பணிகள் நிறைவடைந் ததும் கும்பாபிஷேகம் நடத்தப்பட வேண்டும். 2020-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் 5, 7, 12 ஆகிய தேதி களைக் குறித்துக் கொடுத்த சிவாச் சாரியார்கள், மாவட்ட நிர்வாகம் மூலம் அரசுக்கு தகவல் தெரிவித் துள்ளனர். ஆனால், இதுவரை தமிழக அரசோ, இந்து சமய அற நிலையத் துறையோ, தொல்லியல் துறையோ கும்பாபிஷேக தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவிக்காமல் மவுனம் காக்கின்றன.

இதற்கிடையில் கடந்த வாரம் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் ம.கோவிந்தராவ், தஞ்சாவூர் பெரிய கோயிலுக்கு வந்து யாகசாலை பந்தல் அமைக்க உள்ள இடம், பக்தர்கள் கோயிலுக்கு வந்து செல் லும் இடங்கள் என ஆய்வு செய்த துடன், அங்கிருந்த அதிகாரிகளிடம் விசாரித்துவிட்டுச் சென்றார்.

அப்போது, கும்பாபிஷேக தேதி குறித்து ஆட்சியரிடம், செய்தியாளர் கள் கேட்டபோது, இதுகுறித்து தமிழக அரசுதான் தெரிவிக்க வேண் டும் என்று கூறியதுடன், கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார்.

இதற்கிடையில் கும்பாபிஷேக விழாவின் முன்னோட்டமாக பாலாலய யாகசாலை பூஜைகள் நேற்று காலை தொடங்கின. கும்பாபி ஷேகம் முடியும் வரை பூஜைகள் எது வும் நடைபெறாது. அனைத்து பூஜை வழிபாடுகளும் யாகசாலை பந்த லிலேயே நடைபெறும். நந்தியம் பெருமானுக்கு பிரதோஷ சிறப்பு அபிஷேகங்களும் நடைபெறாது.

நேற்று பாலாலய யாகசாலை பூஜை தொடக்க விழாவில் பங் கேற்ற அரண்மனை தேவஸ்தான நிர்வாகிகளிடமும், இந்திய தொல் லியல் துறையினரிடமும் கும்பா பிஷேகம் எப்போது நடைபெறும் என்ற செய்தியாளர்களின் கேள் விக்கு யாரும் பதிலளிக்கவில்லை.

தஞ்சாவூர் பெரிய கோயிலுக்கு ராஜராஜன் கோபுரத்தின் வழியாக அரசியல்வாதிகள் வந்து சென்றால் அவர்களது பதவி நீடிக்காது என்பது போன்ற ஒரு கருத்து நிலவி வருகிறது. இதனால் ஆட்சியில் உள்ள அரசியல்வாதிகள் பலரும் இங்கு வந்து செல்லத் தயங்கு கின்றனர்.

பாலாலய யாகசாலை பூஜைகள் தொடங்கியும், கும்பாபிஷேக தேதியை அறிவிக்க அரசு தயங்கு வது ஏன் என்ற பக்தர்கள் கேள்வி எழுப்புகின்றனர். அரசின் தயக் கத்தை பார்த்தால் கும்பாபிஷேகம் நடைபெறுமா என்ற சந்தேகம் பக்தர்களிடம் எழுந்துள்ளது.

தஞ்சாவூர் பெரிய கோயில் கும்பாபிஷேகத்துக்கு வெளியூர் மற்றும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பக்தர்கள் வந்து செல்ல இருப்பதால், அதற்கு முன்கூட்டிய திட்டமிட ஏதுவாக கும்பாபிஷேக தேதியை உடனடி யாக அறிவிக்க வேண்டும் என பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x