Published : 30 Nov 2019 08:53 AM
Last Updated : 30 Nov 2019 08:53 AM
தேனி, திருப்பூர், கோவை, தூத்துக்குடி, தென்காசி உட்பட 10 மாவட்டங்களில் உற்பத்தியாகும் நாசிக் பெரிய வெங்காயம் வரும் மார்ச் மாதத்தில் அறுவடையாக உள்ளது. நாசிக் வெங்காய விதையை உற்பத்தி செய்து, தமி ழகத்தில் வெங்காய உற்பத்தி பரப் பளவை அதிகரித்து, எதிர்காலத்தில் தட்டுப்பாட்டை சமாளிக்க நடவ டிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் ஏற்பட்ட மழை வெள்ளம் காரண மாக நாசிக்கில் பெரிய வெங்காய உற்பத்தி கடுமையாகப் பாதிக்கப் பட்டுள்ளது. இதனால் நாடு முழு வதும் பெரிய வெங்காயத்துக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. வெங்காயத்தை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யவேண் டும் என்று அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
தமிழ்நாட்டில் பண்ணை பசுமைக் கடைகள், அமுதம் அங்காடிகள் போன்றவற்றில் குறைந்த விலைக்கு வெங்காயத்தை விற்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக அரசு தரப்பில் கூறப்படுகிறது. ஒரு கிலோ வெங்காயம் ரூ.100 முதல் ரூ.140 வரை விற்கப்படுகிறது. இந் நிலையில், வெங்காய உற்பத்தியை அதிகரிக்கவும், வருங்காலத்தில் வெங்காயம் தட்டுப்பாடின்றி கிடைக் கவும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இதுகுறித்து தோட்டக்கலைத் துறை அதிகாரி ஒருவர் கூறிய தாவது:
4 பேர் கொண்ட குடும்பத்துக்கு சராசரியாக 50 கிராம் வெங்காயம் தேவைப்படும். தற்போது இந்த அளவு கிடைக்கவில்லை என்பதால் அதற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் ராமநாதபுரம், தூத் துக்குடி, திருநெல்வேலியில் ஒரு பகுதி, பொள்ளாச்சி, ஈரோடு, திருப் பூர் உட்பட 10 மாவட்டங்களில் சுமார் 200 ஏக்கரில் பெரிய வெங்காயம் (6 மாத பயிர்) விளைவிக்கப்படுகிறது.
பெரம்பலூர், அரியலூர், திருச்சி, கரூர், நாமக்கல், சேலம், திண்டுக் கல், ஈரோடு, மதுரையின் ஒரு பகுதி, கடலூர், வேலூரில் ஒரு பகுதி, திருவண்ணாமலை உட்பட 20 மாவட்டங்களில் 3 ஆயிரம் ஏக் கரில் சிறிய வெங்காயம் (5 மாத பயிர்) உற்பத்தியாகிறது. வெங் காயம், வாழையின் ஊடுபயி ராகவோ, அனைத்துக் காய்கறி களின் ஊடாகவோ அல்லது வயல் வரப்பிலோ விளைவிக்கப்படு கிறது.
வெங்காய தட்டுப்பாட்டைப் போக்க தேசிய தோட்டக்கலை இயக்கம் மற்றும் ஒருங்கிணைந்த தோட்டக்கலை வளர்ச்சித் திட்டம் மூலமாக விவசாயிகளுக்கு வெங் காய விதை வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு ஆயிரம் கிலோ நாசிக் பெரிய வெங்காய விதை வழங்கப் பட்டுள்ளது.
தற்போது திண்டுக்கல், தேனி, திருப்பூர், கோவை, தூத்துக்குடி, திருநெல் வேலியின் ஒரு பகுதி (தென்காசி மாவட்டம்) உட்பட 10 மாவட்டங் களில் நாசிக் பெரிய வெங்காயம் உற்பத்தி செய்யப்படுகிறது. இவை, அடுத்த ஆண்டு மார்ச் மாதம் அறுவடையாகும்.
மேலும், புதுக்கோட்டை, திருச்சி, அரியலூர், பெரம்பலூர், கரூர், சேலம், ஈரோடு ஆகிய மாவட்டங் களில் உள்ள தோட்டக்கலைத் துறை பண்ணைகளில் ரூ.10 லட்சம் செலவில் நாசிக் பெரிய வெங் காய விதையை உற்பத்தி செய்து, விவசாயிகளுக்கு வழங்கவுள் ளோம்.
வெங்காயம் ஆண்டு முழுவதும் கிடைக்கக்கூடியதுதான். கனமழை யால் அழுகல் நோய் ஏற்பட்டு வெங்காய உற்பத்தி கடுமையாகப் பாதித்துள்ளது. குளிர்பதனக் கிடங்கிலும் வெங்காயத்தை வைக்க முடிவதில்லை. அதனால், வெங்காய சருகால் பட்டறை போட்டு வெங்காயத்தை பாது காப்பாக வைப்பது வழக்கம்.
பட்டறை காற்றோட்டமாக இருக் கும். ஆனால், மழை பெய்தால் நனைந்து வெங்காயம் பாழாகி விடும். மழையில் இருந்து பாது காக்க தார்பாலின் போட்டு மூடி னால் கெட்டுப் போகும் அபாயமும் உள்ளது.
எனவே, வெங்காயத்தைப் பாதுகாக்க வெங்காய சேகரிப்புக் கூடம் (கொட்டகை) அமைத்துத் தருகிறோம். இதுவரை 2 ஆயிரம் கொட்டகைகள் அமைக்கப் பட்டுள்ளன. கொட்டகை அமைக்க ரூ.1.50 லட்சம் செலவாகும். இதில், ரூ.75 ஆயிரம் மானியமாக வழங்கப் படும்.
வெங்காயம் அதிகம் உற்பத்தி யானாலோ, விலை குறைவாக இருந்தாலோ கொட்டகையில் பாது காப்பாக வைத்து பின்னர் விற்க முடியும். தோட்டக்கலைத் துறை பண்ணைகளில் நாசிக் பெரிய வெங்காய விதையை உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு வழங்கும் போது, வெங்காய தட்டுப்பாட்டை ஓரளவு சமாளிக்க முடியும். இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT