Published : 30 Nov 2019 08:45 AM
Last Updated : 30 Nov 2019 08:45 AM
4 சதவீதம் இடஒதுக்கீட்டை முழு மையாக நிரப்ப அரசு துறைகளில் மாற்றுத்திறனாளிகள் பணிபுரி வதற்கு ஏற்ற பணியிடங்களை கண்டறியும் பணியில் மாற்றுத்திறனாளிகள் நலத் துறை அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமை சட்டத்தை 2016-ம் ஆண்டு மத்திய அரசு நிறைவேற்றியது. இச்சட்டத்தின்படி, அரசு வேலை வாய்ப்பில் மாற்றுத்திறனாளி களுக்கான இடஒதுக்கீடு 4 சதவீதமாக உயர்த்தப்பட்டது.
சட்டம் நிறைவேற்றப்பட்டு 3 ஆண்டுகளுக்கு மேலாகியும் இதுவரை அரசு வேலைவாய்ப்பில் 1 சதவீதத்துக்கும் குறைவான இடங் கள்தான் அரசு வேலைவாய்ப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப் பட்டுள்ளது.
இதற்கு, மாற்றுத்திறனாளிகள் பணிபுரிவதற்கு ஏற்ற பணியிடங்கள் எவை என்பது தொடர்பாக அரசு துறைகளுக்கிடையே பல்வேறு குழப்பங்கள் நீடித்து வருவதே காரணம்.
எனவே, இவற்றுக்கு தீர்வு கண்டு மாற்றுத்திறனாளிகளுக்கான 4 சத வீத இட ஒதுக்கீட்டின் அடிப்படை யில் அடுத்த ஆண்டுக்குள் அரசு பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
இதுதொடர்பாக, மாற்றுத் திறனாளிகள் நலத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
மாற்றுத்திறனாளிகள் பணிபுரி வதற்கு ஏற்ற பணியிடங்களைக் கண்டறிவதில் நிலவி வந்த சிக்க லால் இடஒதுக்கீடு முழுமையாக நிரப்பப்படாமல் இருந்து வருகிறது. எனவே, மாற்றுத்திறனாளிகள் பணி புரிவதற்கு தகுதியான பணியிடங் களைக் கண்டறிய முடிவு செய்யப் பட்டுள்ளது.
இதன்படி, தமிழகத்தில் உள்ள அனைத்து துறைகளிலும் நோடல் அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்டு உள்ளார். அவர் மூலம், அந்தந்த துறைகளில் உள்ள ஏ மற்றும் பி நிலையிலான பணியிடங்களில் தகுதியானவை கண்டறியப்பட்டு வருகின்றன. இதன் அடிப்படை யில், ஏற்கெனவே மீன்வளத் துறை, வனத் துறை உள்ளிட்ட சில துறைகளில் இருந்து 244 பணி யிடங்கள் கண்டறியப்பட்டு அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டன.
தமிழக அரசும் தேர்வு நடத்தி மாற்றுத்திறனாளிகளை பணியமர்த் தியது. இதே போல், தற்போது 250 பணியிடங்கள் கண்டறியப் பட்டு அரசுக்கு அனுப்பி வைக்கப் பட்டுள்ளன. அதில், எந்தெந்த பணி யிடங்களுக்கு 21 வகையில் எந்த வகையான மாற்றுத்திறனாளியை நியமிக்கலாம் என்றும் கூறப்பட்டு உள்ளது. விரைவில், அதற்கான அறிவிப்பும் வெளியாகும்.
பணியிடங்கள் கண்டறியப்பட்ட வுடன் மாற்றுத்திறனாளிகளை பணியமர்த்த முடியாது என்று ஏதாவது ஒரு துறை கருதினால் மாற்றுத்திறனாளிகள் நலத் துறையிடம் அனுமதி பெற்ற பிறகே வேறு நபர்களை அந்த பணியிடத்துக்கு நியமிக்க முடியும்.
சி மற்றும் டி பிரிவு பணி யிடங்களைப் பொறுத்தவரை 4 சதவீதத்தை முழுமையாக அளிக்க வேண்டும். அடுத்த 6 மாதத்தில் அனைத்து துறைகளி லும் மாற்றுத்திறனாளிகளுக்கான பணியிடங்கள் கண்டறியப்பட்டு விடும்.
அதன் பிறகு, சிறப்பு தேர்வு நடத்தப்பட்டு அனைத்து துறை களிலும் 4 சதவீதம் இடஒதுக்கீடு அடிப்படையில் மாற்றுத்திறனாளி கள் நியமிக்கப்பட உள்ளனர். இதற்கான, பணிகளில் தற்போது தீவிரமாக ஈடுபட்டு வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT