Published : 29 Nov 2019 09:59 AM
Last Updated : 29 Nov 2019 09:59 AM
தமிழகத்தில் ஏற்கெனவே வரை யறுக்கப்பட்ட வார்டுகளின் அடிப் படையில் உள்ளாட்சி தேர்தல் விரை வில் நடைபெறும் என திருப்பத்தூர் மாவட்ட தொடக்க விழாவில் முதல் வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தின் 35-வது மாவட்ட மாக திருப்பத்தூர் மாவட்டத்தை முதல்வர் பழனிசாமி நேற்று தொடங்கி வைத்தார். இதற்கான விழா திருப்பத்தூர் - ஜோலார் பேட்டை சாலையில் உள்ள தனியார் மெட்ரிக் பள்ளி மைதானத்தில் நடை பெற்றது.
நிகழ்ச்சியில், தலைமை செயலாளர் சண்முகம் வரவேற்றார். அரசு கூடுதல் தலைமை செயலாளர் அதுல்யமிஸ்ரா திட்ட விளக்கவுரை ஆற்றினார். துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், வணிக வரித் துறை அமைச்சர் கே.சி.வீரமணி, தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர்கபில் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம்
முதல்வர் பழனிசாமி தலைமை தாங்கி திருப்பத்தூர் மாவட்டத்தை தொடங்கி வைத்துப் பேசும்போது, "தமிழகத்தில் ஒவ்வொரு பகுதியும் முன்னேற்றம் அடைய வேண்டும் என்ற நோக்கத்திலும், நிர்வாக வசதிக்காகவும், அரசின் வளர்ச்சி பணிகள், நலத்திட்ட உதவிகள் பொதுமக்களிடம் விரைவாக சென்று சேர வேண்டும் என்ற கோட்பாட்டின்படி மிகப்பெரிய மாவட்டமான வேலூர் மாவட்டம் 3-ஆக பிரிக்கப்பட்டுள்ளது.
புதிய மாவட்டங்கள் பிரிப்புக் கும், உள்ளாட்சித் தேர்தலுக்கும் எந்த தொடர்பும் இல்லை. மாவட்டங் கள் பிரிக்கப்படுவதால் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாது என திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்து வருகின்றன. 2018-ம் ஆண்டு ஏற்கெனவே மறுவரை யறை செய்யப்பட்ட வார்டுகளின் அடிப்படையில் தமிழக மாநில தேர்தல் ஆணையம் மூலம் உள்ளாட்சித் தேர்தல் விரைவில் நடத்தப்படும்" என்றார்.
ராணிப்பேட்டை
இதேபோன்று, ராணிப்பேட்டை கால்நடை நோய்த் தடுப்பு மருந்து நிலைய வளாகத்தில் நடைபெற்ற விழாவில், 36-வது மாவட்டமாக ராணிப்பேட்டையை தொடங்கி வைத்தும் புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும் முடிவுற்ற திட்டப் பணிகளை தொடங்கி வைத்தும் முதல்வர் பழனிசாமி பேசியதாவது:
அதிமுக ஆட்சியில் எந்த நன்மையும் செய்யவில்லை என்று ஸ்டாலின் பொய் பிரச்சாரம் செய்து வருகிறார். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் மக்களிடம் பொய் வாக்குறுதிகளை கொடுத்து வெற்றி பெற்றார்கள்.
நிறுத்தப்பட்ட வேலூர் தொகுதி யில் மீண்டும் தேர்தல் நடந்தபோது அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என்று எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் பேசினார்.
வேலூர் நாடாளுமன்ற தேர்தலுக்கு 70 நாட்கள் முன்னதாக நடந்த குடியாத்தம் சட்டப்பேரவை தொகுதிக்கான இடைத்தேர்தலில் திமுக வாங்கிய வாக்குகளை விட நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக 12 ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்றது. திமுகவினர் கூறிய பொய்களை மக்கள் நம்பத் தயாராக இல்லாமல் எங்களுக்கு வாக்களித்தனர்.
2021-ல் அதிமுக கூட்டணி
வரும் 2021 தேர்தலில் அதிமுக கூட்டணி மாபெரும் வெற்றிபெறும். உள்ளாட்சித் தேர்தல் நடக்காது என்று ஸ்டாலினும் அவரது கூட்டணி கட்சித் தலைவர்களும் பொய் பிரச்சாரம் செய்து வருகிறார் கள். நிச்சயம் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும். ஆனால், கொல்லைப் புறமாக தேர்தலை தடுக்க திமுக வினர் முயற்சிக்கின்றனர். ஸ்டாலின் தான் தேர்தலை சந்திக்க பயப்படுகி றார். மற்றவர்களை தூண்டிவிட்டு தேர்தலை நிறுத்த முயற்சிக்கிறார்.
மத்திய அரசுடன் இணக்கம்
மத்திய அரசுக்கு நாங்கள் அடிமையாக இருப்பதாக ஸ்டாலின் கூறி வருகிறார். நீங்கள் மத்திய அரசில் அங்கம் வகித்தபோது தமிழக நலனுக்காக என்ன பெற்றீர் கள் எனக் கூற முடியுமா? மாநிலத் தின் வளர்ச்சிக்காகவும் அதிக நிதி யைப் பெறவும் நாங்கள் மத்திய அரசுடன் இணக்கமாக இருக்கி றோம். பிரிக்கப்பட்ட மாவட்டத்தில் உள்ள மக்கள் எளிதில் மாவட்ட நிர்வாகத்தை தொடர்பு கொள்ள முடியும். இவ்வாறு முதல்வர் பழனிசாமி பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT