Published : 29 Nov 2019 08:23 AM
Last Updated : 29 Nov 2019 08:23 AM
காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு 5 மணி நேரம் பெய்த கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் தண்ணீர் தேங்கியது. இதனையொட்டி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. குறிப்பாக, தாம்பரம் அதன் சுற்றுப் பகுதிகளில் அதிகனமழை பெய்துள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று அதிகாலை நிலவரப்படி காஞ்சிபுரம் - 32.20 மி.மீ, பெரும் புதூர் - 89.20 மி.மீ, உத்திரமேரூர் - 28 மி.மீ, வாலாஜாபாத் - 11 மி.மீ, செங்கல்பட்டு - 17 மி.மீ, திருக்கழுக்குன்றம் - 8.40 மி.மீ, மாமல்லபுரம் - 9.40 மி.மீ, செய்யூர் - 11 மி.மீ, மதுராந்தகம் - 4 மி.மீ, தாம் பரம் - 146.20 மி.மீ என்ற வகையில் மழையளவு பதிவானது.
பள்ளி, கல்லூரிக்கு விடுமுறை
காஞ்சிபுரம் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்திருந்தாலும் தாம்பரம், பெரும்புதூர் பகுதி யில் அதிக மழை பதிவாகியுள்ளது. அந்த வட்டங்களில் தாழ்வான பகுதிகளில் அதிக அளவு மழை நீர் தேங்கி இருந்தது. இதைத் தொடர்ந்து நேற்று ஒரு நாள் மட்டும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இருப்பினும் நேற்று காலையில் இருந்து இரவு வரை மழை இல்லை. வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது.
14 செ.மீ. மழை பதிவு
தாம்பரம் மற்றும் அதன் சுற்றுப் பகுதியில் நேற்று முன் தினம் இரவு 14 செ.மீ. மழை பெய்துள் ளது. இதனால் கிழக்கு தாம்பரம் - வேளச்சேரி சாலை, மேற்கு தாம் பரம் - பெருங்களத்தூர் பகுதிகளை இணைக்கும் இரும்புலியூர் பாலம், கிழக்கு - மேற்கு தாம்பரம் பகுதி களை இணைக்கும் ரயில்வே சுரங்கப் பாதை ஆகியவை வெள் ளத்தில் மூழ்கின.
அதேபோல் மாடம்பாக்கம், ராஜகீழ்பாக்கம், சேலையூர் - அகரம் தென் சாலை யில் அமைந்துள்ள, திருவஞ்சேரி ஊராட்சி, சிட்லபாக்கம் பேரூ ராட்சி ஆகிய பகுதிகளில் சாலை களில் ஓடிய வெள்ளநீர் குடி யிருப்புகளுக்குள் புகுந்தது. மழை யால் பெருங்களத்தூரில் கடுமை யான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
கடந்த 2015-ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப் பெருக்கின்போது மேற்கு தாம்பரம், முடிச்சூர் பகுதிகள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகின. இதைத்தொடர்ந்து அடுத்தடுத்த ஆண்டுகளில் இந்தப் பகுதி களில் மேற்கொள்ளப்பட்ட மூடு கால்வாய், பாப்பன் கால்வாய், முடிச்சூர் சாலை மழைநீர் வடி கால்வாய் மற்றும் அடையாறு ஆறு கரை சீரமைப்புப் பணிகள் முழுமையாக நிறைவடைந்ததால், கடந்த சில நாட்களாக பெய்த மழையால் இந்தப் பகுதிகள் பெரும் வெள்ளப் பாதிப்புகளுக்கு உள்ளாகாமல் தப்பியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT