Published : 29 Nov 2019 07:53 AM
Last Updated : 29 Nov 2019 07:53 AM

மின்னணு கழிவுகளை பெறும் மையங்கள் அதிகரிப்பு: சென்னை மாநகராட்சி நடவடிக்கை

மின்னணு கழிவுகள் பெறும் மையங்களின் எண்ணிக்கையை சென்னை மாநகராட்சி அதிகரித் துள்ளது.

இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி நேற்று வெளி யிட்ட செய்திக்குறிப்பில் கூறியி ருப்பதாவது: சென்னை மாநக ராட்சி, அடையாறு மண்டலத்தில் 170-வது வார்டு முதல் 182-வது வார்டு வரையிலான அனைத்து வார்டுகளிலும் பிரத்யேக மின்ன ணுக் கழிவு சேகரிப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இதில் பொது மக்களிடமிருந்து உபயோகமற்ற கைபேசிகள், சார்ஜர்கள், தொலைக்காட்சி பெட்டி, கணினி, பிரின்டர், கீ போர்டு, மவுஸ், ஹியர் ஃபோன், பயன்படாத டெலிபோன், ரேடியோ டிரான்சிஸ்டர்கள், சர்க்யூட் போர்டு கள், டிவி ரிமோட், பேட்டரிகள், மின்விசிறி, ஏர் கண்டிஷனர்கள், ஏர் கூலர், இன்டக்ஸன் ஸ்டவ், ஸ்டெபிளைசர், இன்வெர்டர்ஸ், மிக்ஸி, கிரைண்டர் போன்ற மின்னணு கழிவுப் பொருட்கள் வரும் 30-ம் தேதி வரை பெறப்படும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

அதைத் தொடர்ந்து, சென்னை மாநகராட்சி, தெற்கு வட்டார அலுவலகத்துக்கு உட் பட்ட வளசரவாக்கம், ஆலந் தூர், பெருங்குடி மற்றும் சோழிங்க நல்லூர் ஆகிய 4 மண்டலங்களில் பொதுமக்களிடம் இருந்து மின் னணு கழிவுகளை பெறுவதற் காக, அந்தந்த மண்டல கோட்ட அலுவலகங்களில் பிரத்யேக மின்னணு கழிவு சேகரிப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள் ளன. இம்மையங்கள் வரும் 30-ம் தேதி முதல் டிசம்பர் 10-ம் தேதி வரை செயல்படும்.

இதுகுறித்து மேலும் தகவல் களுக்கு வளசரவாக்கம் மண்ட லத்தில் 94451 90211, ஆலந்தூர் மண்டலத்தில் 94451 90212, பெருங் குடி மண்டலத்தில் 94451 90214, சோழிங்கநல்லூர் மண்டலத்தில் 94451 90215 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x