Published : 18 Aug 2015 03:31 PM
Last Updated : 18 Aug 2015 03:31 PM
தூத்துக்குடி பண்ணை பசுமை நுகர்வோர் அங்காடி 357 நாட்களில் ரூ. 5 கோடிக்கு காய்கறிகள் விற்று சாதனை படைத்துள்ளது. தமிழகத்தில் அமைக்கப்பட்ட பண்ணை பசுமை நுகர்வோர் அங்காடிகளில் தூத்துக்குடி முதலிடத்தை பிடித்துள்ளது.
தூத்துக்குடியில் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கம் மூலம் சங்க அலுவலக வளாகத்தில் கடந்த 2014 ஆகஸ்ட் 23-ல் பண்ணை பசுமை நுகர்வோர் அங்காடி தொடங்கப்பட்டது. முற்றிலும் குளிர் சாதன வசதியுடன் விரிவாக்கம் செய்யப்பட்டது. சுமார் 20 பணியாளர்கள் பச்சை நிற சீருடை அணிந்து பணியாற்றி வருகின் றனர்.
காய்கறி கொள்முதல்
தூத்துக்குடி மாவட்ட விவசாயி கள் மூலம் விளைவிக்கப்படும் காய்கறிகள் விவசாய குழுக் களிடமிருந்து நேரடியாக கொள்முதல் செய்யப்படுகின்றன. இதர காய்கறிகள் மதுரை, பாவூர்சத்திரம், ஒட்டன்சத்திரம் சந்தைகளில் இருந்து நேரடியாக கொள்முதல் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன.
விற்பனையில் சாதனை
இக்கடையின் மூலம் தினசரி சராசரியாக 5018 கிலோ காய்கறி கள் ரூ.1,40,289 அளவுக்கு விற்பனை யாவதாக கணக்கிடப்பட்டுள்ளது. தினசரி சராசரியாக 800 முதல் 1000 நுகர்வோர்கள் வரை வந்து காய்கறி வாங்கிச் செல்கின்றனர்.
அங்காடியின் மூலம் தூத்துக்குடி மாநகராட்சி யால் நடத்தப்படும் 10 அம்மா உணவகங்களுக்கு தினசரி ரூ.10 ஆயிரம் அளவில் காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டு வருகின் றன. இந்த கடை தொடங்கப்பட்ட 79 நாளில் ரூ.1 கோடிக்கும், 145 நாளில் ரூ.2 கோடிக்கும், 220 நாளில் ரூ. 3 கோடிக்கும் விற்பனை செய்து சாதனை படைத்துள்ளது.
357 நாளில் ரூ.5 கோடி
ஓராண்டு நிறைவடையும் போது விற்பனை ரூ. 5 கோடியை எட்ட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் இலக்கு நிர்ணயித் திருந்தார். ஆனால், ஓராண்டு முடிவடைவதற்குள் 357-வது நாளிலேயே ரூ. 5 கோடி விற்பனையை எட்டியுள்ளது.
நேற்று முன்தினம் வரை இந்த கடையில் 17,91,465 கிலோ காய்கறிகள் ரூ. 5,00,83,141-க்கு விற்பனையாகியுள்ளது. நேற்று முன்தினம் ஒரே நாளில் மட்டும் 5499 கிலோ காய்கறிகள் ரூ. 1,51,471-க்கு விற்பனையாகியுள்ளது.
அமைச்சர் பாராட்டு
மாவட்ட ஆட்சியர் ம.ரவிக்குமார் கூறும்போது, ‘தூத்துக்குடி பண்ணை பசுமை காய்கறி கடை ஒராண்டு நிறைவு பெறும் நாளில் ரூ. 5 கோடி விற்பனை இலக்கை எட்டும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதற்கு முன்பே அந்த இலக்கை எட்டியுள்ளது. தமிழகத்தில் உள்ள பண்ணை பசுமை காய்கறி கடைகளில் தூத்துக்குடி கடை தான் சிறப்பாக செயல்படுவதாக கூட்டுறவுத் துறை அமைச்சரே பாராட்டு தெரிவித்தார். மேலும், தமிழக அரசின் விருதை இக்கடை ஏற்கெனவே பெற்றுள்ளது. தொடர்ந்து இந்த கடை சிறப்பாக செயல்பட அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்’ என்றார் ஆட்சியர்.
நுகர்வோர் பாராட்டு
தூத்துக்குடி டூவிபுரம் பகுதியை சேர்ந்த ஆர். ரேபோக்காள் கூறு ம்போது, ‘காய்கறிகள் தரமானதாக, புத்தம் புதிதாக கிடைக்கின்றன. எடை துல்லியமாக இருக்கிறது. கடைகளை விட விலை குறைவாக உள்ளது. இதுபோன்ற பண்ணை பசுமை காய்கறி கடைகளை அதிகம் திறக்க வேண்டும்’ என்றார் அவர்.
மேலும் ஒரு கடை
இக்கடை நல்ல வரவேற்பை பெற்றதைத் தொடர்ந்து, தூத்துக் குடி பழைய பஸ் நிலையத்தில் ஒரு பண்ணை பசுமை காய்கறி கடை அமைக்க வேண்டும் என மாநகராட்சி சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. இதற்காக பஸ் நிலையத்தில் 600 சதுர அடி இடத்தை ஒதுக்கி தருவதற்கு கடந்த 4-ம் தேதி நடைபெற்ற மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது குறிப் பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT