Published : 28 Nov 2019 07:20 AM
Last Updated : 28 Nov 2019 07:20 AM
``தமிழகத்தில் அடுத்த ஆண்டு ரூ.1,000 கோடி மதிப்பில் குடி மராமத்து பணிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது” என தமிழ் நாடு நீர்வள ஆதார பாதுகாப்பு மற்றும் ஆறுகள் மறுசீரமைப்பு கழகத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் சத்ய கோபால் கூறினார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட குடிமராமத்து பணிகளை நேற்று ஆய்வு செய்த அவர் செய்தியாளர்களிடம் கூறிய தாவது:
தமிழகம் முழுவதும் குடிமரா மத்து பணிகள் செய்யப்பட்டு வருகின்றன. விவசாயிகளின் நல னுக்காக தமிழக முதல்வர் கொண்டு வந்த மிகப்பெரிய திட்டம் இது.
20 சதவீத பணி நிறுத்தம்
தமிழகம் முழுவதும் குடிமரா மத்து திட்டத்தில் இந்த ஆண்டு 1,800 பணிகள் எடுக்கப்பட்டு, 1,000 பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. மீத முள்ள பணிகள் 80 முதல் 90 சதவீதம் முடிவடைந்துள்ளன. குறிப் பாக அனைத்து இடங்களிலும் தண்ணீரை சேமிப்பதற்கான பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.
கடந்த மாதம் நல்ல மழை பெய்து குளங்களுக்கு தண்ணீர் வந்துள்ளதால், 20 சதவீத பணிகளை செய்யாமல் நிறுத்தி வைத்துள்ளோம். வரும் ஜனவரி மாதத்துக்கு பிறகு இந்த பணிகள் மேற்கொள்ளப்படும்.
நீர் சேமிப்பு அதிகரிப்பு
குடிமராமத்து பணிகளால் குளங்களில் நீர் சேமிப்பு அதிகரித் துள்ளது. வரத்து கால்வாய்கள் சீரமைக்கப்பட்டதால் குளங் களுக்கு மழை நீர் வந்துள்ளது. கரைகளை பலப்படுத்துதல், மதகுகளை சீரமைத்தல் போன்ற பணிகளும் செய்யப்பட்டுள்ளன.
அடையாளம் காணும் பணி
அடுத்தகட்ட குடிமராமத்து பணிகளை தொடங்குவது குறித்து தமிழக முதல்வர் ஆலோசனை நடத்தியுள்ளார். அனைத்து மாவட்டங்களிலும் அடுத்த ஆண்டு மேற்கொள்ள வேண்டிய குடி மராமத்து பணிகளை அடையாளம் கண்டு விரைவாக அரசாணை வெளியிட்டு, பிப்ரவரி - மார்ச்சில் பணிகளைத் தொடங்க வேண்டும் என முதல்வர் அறிவுறுத்தியுள்ளார். அதன்படி பணிகளைத் தொடங்கி ஜூன் - ஜூலைக்குள் முடிக்க திட்டமிட்டுள்ளோம்.
நிதி ஒதுக்க ஏற்பாடு
நடப்பு ஆண்டு பொதுப்பணித் துறை குளங்களில் குடிமராமத்து பணிகளை செய்ய ரூ.750 கோடி ஒதுக்கப்பட்டது. அடுத்த ஆண்டு ரூ.1,000 கோடி அளவுக்கு பணிகளை செய்ய திட்டமிட்டுள்ளோம். அதற்கு மேல் நிதி தேவைப்பட்டாலும் நிதித் துறையிடம் பேசி ஒதுக்கீடு செய்ய ஏற்பாடு செய்யப்படும்.
புதிதாக எந்தெந்த இடங்களில் அணைகள், தடுப்பணைகள் கட்ட லாம் என்பது குறித்தும் ஆய்வு செய்து வருகிறோம். நீர்நிலை களில் உள்ள ஆக்கிரமிப்புகள் உடனுக்குடன் மாவட்ட ஆட்சி யர்கள் மூலம் அகற்றப்படும். தேவை யான இடங்களில் காடு வளர்ப்பு திட்டம் செயல்படுத்தப்படும் என் றார்.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, மாநகராட்சி ஆணையர் வீ.ப.ஜெயசீலன், பொதுப்பணித் துறை நீர் ஆதார அமைப்பு கண்காணிப்பு பொறி யாளர் ஜெயபாலன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT