Published : 27 Nov 2019 08:19 AM
Last Updated : 27 Nov 2019 08:19 AM
இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சவும், பிரதமர் மகிந்த ராஜபக்சவும் சீனாவின் செல்ல பிள்ளைகள் என்பதால் இலங்கை யில் சீனாவின் ஆதிக்கம் வளர விடாமல் இந்தியா பாதுகாக்க வேண்டும் என இலங்கையின் மட்டகளப்பு நாடாளுமன்ற உறுப்பி னர் சீனு தம்பி யோகேஸ்வரன் தெரிவித்தார்.
நேற்று நாமக்கல் வந்த அவர் மோகனூர் சாலையில் உள்ள ஐயப் பன் கோயிலில் வழிபாடு நடத்திய பிறகு செய்தியாளர்களிடம் கூறிய தாவது: இலங்கையில் தற்போது பவுத்த சிங்கள தீவிரவாதம் தலை யெடுத்து இருக்கிறது. நான் எல்லா மக்களையும் சரிசமமாக நடத்து வேன் என இலங்கை அதிபர் கோத்த பய ராஜபக்ச கூறியுள்ளார். ஆனால், சகோதரர்களான கோத்த பய ராஜபக்ச, மகிந்த ராஜபக்ச இருவரும் பவுத்த தீவரவாதத் தோடு இயங்குவதன் காரணமாக பவுத்தத்துக்கும், சிங்கள மக்களுக் கும்தான் முதலிடமும் கிடைக்கும்.
அதிபரும், பிரதமரும் சீனாவின் செல்ல பிள்ளைகள். எனவே, சீனா வின் ஆதிக்கம் இலங்கையில் வளர விடாமல் பாதுகாக்க வேண்டிய அவசியம் இந்தியாவுக்கு உள்ளது. இந்தியாவின் அணுகுமுறை எவ் வாறு இருக்கும் என போகபோகத் தான் தெரியும்.
கோத்தபய ராஜ்பக்ச வந்ததும் ராணுவத்துக்கு அதிகாரம் கொடுக் கப்பட்டிருக்கிறது. எல்லா இடங்க ளிலும் சோதனை நடைபெறுகிறது என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT