Published : 27 Nov 2019 07:16 AM
Last Updated : 27 Nov 2019 07:16 AM

தென்பிராந்திய அளவில் போதைப் பொருள் தடுப்பு குறித்து 7 மாநில அதிகாரிகள் ஆலோசனை

தென் பிராந்தியத்தில் போதைப்பொருள் விற்பனையை தடுப்பது குறித்த ஆலோசனை கூட்டம் சென்னையில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற தமிழக டிஜிபி ஜே.கே.திரிபாதி, ஏடிஜிபி ஷகீல்அக்தர் மற்றும் பிற மாநில காவல்துறை அதிகாரிகள்.

சென்னை

தென் மாநிலங்களை உள்ளடக்கிய தென் பிராந்தியத்தில் போதைப் பொருள் விற்பனையை தடுப்பது குறித்த ஆலோசனைக் கூட்டம் சென்னையில் நேற்று முன்தினம் நடந்தது. இதில் காவல் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

போதைப் பொருள் நுண்ண றிவு பிரிவின் தென்னிந்திய பிராந்தி யங்களுக்கான ஒருங்கிணைப்பு கலந்தாய்வுக் கூட்டம் சென்னையில் நடந்தது. இதில் தமிழக, ஆந்திரா, புதுச்சேரி, தெலங்கானா, கேரளா, கர்நாடகா ஆகிய மாநி லங்கள் மற்றும் அந்தமான் நிக்கோபார் தீவுகள் பகுதிகளைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் தமிழக சட்டம்-ஒழுங்கு டிஜிபி ஜே.கே.திரிபாதி பேசும்போது, “போதைப் பொருள் பயன்பாடு மற்றும் கடத்தலை கட்டுப்படுத்தும் வழிகளை அனைத்து மாநிலங்களும் மேற் கொண்டு, இளம் தலைமுறை யினரை இச்சமுதாய சீர்கேட்டில் இருந்து காப்பாற்ற வேண்டும். இந்த பொறுப்பின் முக்கியத்துவத்தை உணர்ந்து போலீஸார் பணி யாற்ற வேண்டும். கடந்த சில ஆண்டுகளாக போதைப் பொருள் உபயோகிப்போர் எண்ணிக்கை தமிழகத்தில் உயர்ந்து வருகிறது.

போதைப் பொருள் நுண்ணறிவு பிரிவு காவல்துறை கூடுதல் டிஜிபி முகமது ஷகில் அக்தர், அனைத்து மாநில போதைப் பொருள் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகளும் ஒருங்கிணைந்து செயல்பட்டு போதைப் பொருளற்ற தென்னிந்தியாவை உருவாக்க அனைவரும் ஒத்துழைக்க வேண் டும்’’ என பேசினார்.

இக்கலந்தாய்வு கூட்டத்தில் கேரள மாநில காவல்துறை கூடுதல் டிஜிபி அனந்த கிருஷ்ணன், ஐஜி பி.விஜயன், கர்நாடக மாநில கூடுதல் டிஜிபி தயானந்தா, தெற்கு மற்றும் மேற்கு பிராந்திய போதைப் பொருள் தடுப்பு முகமை துணை இயக்குநர் முத்தா அசோக் ஜெயின், அந்தமான் நிகோபார் தீவுகள் காவல்துறை ஐஜி சஞ்சய் குமார், தெலங்கானா மாநில குற்றப்புலனாய்வு பிரிவு எஸ்பி பரிமளா ஹனா நுத்தன், புதுச்சேரி மாநில தெற்கு காவல்துறை எஸ்.பி. சிந்தா கோதண்டராம் ஆகியோர் பங்கேற்றனர்.

போதைப் பொருள் கடத்தப் படும் வழிகள் மற்றும் அதை தடுக்கும் முறைகள் பற்றி கூட்டத் தில் விரிவாக விவாதிக்கப்பட் டது. இந்நிகழ்ச்சியில் தமிழக போதைப் பொருள் நுண்ணறிவு பிரிவு காவல்துறை எஸ்.பி. கலைச் செல்வன் உட்பட பலர் பங்கேற் றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x