Published : 25 Nov 2019 10:15 AM
Last Updated : 25 Nov 2019 10:15 AM

மதுரை அமமுகவில் தலைதூக்கியது கோஷ்டி பூசல்: மாநகர் வடக்கு மாவட்ட செயலாளர் மீது தலைமைக்கு புகார்

கோப்புப் படம்

சுப.ஜனநாயகச் செல்வம்

மதுரை 

மதுரை அமமுகவில் கோஷ்டி பூசல் காரணமாக பதவி நீக்கம் செய்யப்பட்ட பகுதிச் செயலர் கள் மாநகர் மாவட்டச் செயலா ளருக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றி கட்சித் தலைமைக்கு அனுப்பியுள்ளனர்.

மதுரை மாநகர் வடக்கு மாவட்டத்தில் வடக்கு 1-ம் பகுதி, 2-ம் பகுதி, மேற்கு 1-ம் பகுதி, 2-ம் பகுதி ஆகிய நான்கு பகுதிகள் உள்ளன. இதில் மதுரை மாநகராட்சியின் 33 வார்டுகள் அடங்கியுள்ளன. இதை கட்சித் தலைமை உத்தரவுப்படி 41 வார்டுகளாகவும், 6 பகுதிகளாகவும் பிரிக்கும் பணிகள் நடந்தன. இதில், வடக்கு 1-ம் பகுதிக்கு அசோகன், 2-ம் பகுதிக்கு டால்பின் அசோக், மேற்கு 1-ம் பகுதிக்கு மாவூத் வேலவன், 2-ம் பகுதிக்கு பைகாரா செழியன் ஆகிய 4 பேர் செயலாளராக இருந்தனர்.

புதிதாக உருவாக்கும் பகுதிகளுக்கான நிர்வாகிகள் நியமனத்தில் மாநகர் வடக்கு மாவட்டச் செயலர் ஜெயபால் தனக்கு வேண்டியவர்களுக்குப் பொறுப்பு வழங்குவதாகவும், கட்சியில் உழைத்தவர்கள் புறக்கணிக்கப்படுவதாகவும் புகார்கள் எழுந்தன. இதனால், அமமுகவுக்குள் இருந்த கோஷ்டிப் பூசல் வெளிச்சத்துக்கு வந்தது.

இது தொடர்பாக மண்டலப் பொறுப்பாளர் தலைமையில் சமரசப் பேச்சுவார்த்தை நடந்தது. இதிலும் தீர்வு காணாதநிலையில், வடக்கு மாநகர் மாவட்டச் செயலர் ஜெயபால் கூட்டிய நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தை 3 பகுதிச் செயலாளர்கள் உள் ளிட்ட நிர்வாகிகள் சிலர் புறக்கணித் தனர். இது குறித்து கட்சி யின் தலைமைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

திருச்சியில் கட்சியின் பொதுச் செயலர் டிடிவி தினகரன் தலைமை யில் நடந்த உள்ளாட்சித் தேர்தல் ஆலோசனைக் கூட்டத்துக்குப் பின் பகுதிச் செயலர்கள் அசோகன், அசோக், செழியன் ஆகியோர் பொறுப்பில் இருந்து விடுவிக் கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், பகுதிச் செயலர்கள் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்ட மூன்று பேரும் வட்டச் செயலாளர்கள் 20 பேருடன் நேற்று முன்தினம் ஆலோசனை நடத்தினர். கட்சியின் கட்டுப்பாட்டை மீறி உறவினர்களுக்கும், வார்டில் இல்லாதவர்களுக்கும் பதவி வழங்க முயற்சி செய்யும் மாநகர் மாவட்டச் செயலாளர் ஜெயபால் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றினர். இத்தீர்மானத்தை கட்சியின் தலைமைக்கு அனுப்பியதாக, பதவி நீக்கம் செய்யப்பட்ட நிர்வாகிகள் தெரிவித்தனர். இதனால் மதுரை மாநகர் அமமுகவுக்குள் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

இது குறித்து மாநகர் வடக்கு மாவட்டச் செயலாளர் ஜெய பால் கூறுகையில், கட்சித் தலைமையின் உத்தரவுப்படி வார்டுகள் பிரிக்கும் பணி தமிழகம் முழுவதும் நடக்கிறது. அதன்படி வடக்கு மாவட்டத்தில் உள்ள 33 வார்டுகளை 41 வார்டுகளாகப் பிரிக்கும் பணிகள் நடந்தன. அதற்கு சிலர் எதிர்ப்புத் தெரிவித்து தலைமையின் கட்டுப்பாட்டை மீறினர். அவர்கள் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். எனக்கு வேண்டியவர்கள் யாருக்கும் பொறுப்புகள் வழங்கப்படவில்லை, என்றார்.

பகுதிச் செயலாளர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்ட அசோகனிடம் கேட்டபோது, அமமுக தொடங்கியது முதல் கட்சியில் இருக்கிறோம். வார்டுகள் அதிகரிப்பதை நாங்களும் வரவேற்கிறோம். அதே நேரத்தில் கட்சியில் உழைத்தவர்களுக்கு வாய்ப்பளிக்காமல், பணம் செலவழிக்கும் நபர்கள், உறவி னர்கள் ஆகியோருக்கு வாய்ப் பளிக்க மாவட்டச் செயலாளர் முயற்சித்தார். கட்சியில் உழைத் தவர்களுக்கு வாய்ப்புக் கேட்டது தவறு என்கிறார்கள். இது தொடர்பாக மண்டலப் பொறுப்பாளர் கேகே. உமாதேவன் சமரசம் பேசியும் பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்கவில்லை. நாங்கள் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டாலும், தொடர்ந்து சசிகலா வழியில் டிடிவி.தினகரன் தலைமையில் கட்சிக்கு உழைப்போம், என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x