Published : 17 Aug 2015 08:45 AM
Last Updated : 17 Aug 2015 08:45 AM
தமிழகத்திலேயே அதிகபட்சமாக வேலூர் மாவட்டத்தில் ராணுவ கேன்டீன் மூலம் மாதம் ஒன்றுக்கு 2 லட்சம் மது பாட்டில்கள் விற்பனை யாகின்றன. ஒருவேளை, மது விலக்கு அமலுக்கு வந்தால் இந்த விற்பனை நிறுத்தப்படுமா என்ற சந்தேகம் படைவீரர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
தமிழகத்தில் முன்னாள் படை வீரர்கள் 1 லட்சத்து 80 ஆயிரம் பேர் உள்ளனர். இவர்களுக்கு அந் தந்த மாவட்டங்களில் உள்ள ராணுவ கேன்டீன்களில் மலிவு விலையில் மது வழங்கப்படுகிறது. ராணுவத்தில் இவர்கள் வகித்த பதவிக்கு ஏற்ப மாதத்துக்கு 5 முதல் 10 பாட்டில்கள் வரை பெறலாம். 2008-ம் ஆண்டு முதல், முன்னாள் படைவீரர்களின் விதவை மனைவிக்கும் வழங்கப்படுகிறது.
இவ்வாறு மது வாங்குபவர்களில் 20 சதவீதம் பேர் மட்டுமே பயன் படுத்துகின்றனர். 80 சதவீதம் பேர் அதிக விலைக்கு வெளியில் விற்று விடுகின்றனர். அந்த பணத்தில், வீட்டுக்குத் தேவையான பொருட் களை ராணுவ கேன்டீனிலேயே வாங்கிச் செல்வதை பலர் வழக்கமாக வைத்திருக்கின்றனர்.
அந்தந்த மாவட்டத்தில் உள்ள தேசிய மாணவர் படை அலுவலகங் களில் பணிபுரியும் படைவீரர்கள், பள்ளி, கல்லூரிகளில் பணிபுரியும் தேசிய மாணவர் படை அதிகாரிகள் (ஆசிரியர்கள்) ஆகியோருக்கு ராணுவ கேன்டீன்களில் வழங்கப் படும் மதுவும் வெளியில் விற்கப்படு கிறது.
மது அருந்துபவர்களும் டாஸ்மாக் மதுவைவிட ராணுவ கேன்டீன் மதுவுக்கு அதிக முன்னுரிமை தரு கின்றனர். ஏற்கெனவே கள்ளச் சாராயத் தொழிலில் ஈடுபட்டு வந்தவர்கள் தற்போது, கேன்டீன் மதுவை விற்றுத் தரும் முகவர்கள் போல ராணுவ கேன்டீன்களின் அருகில் சுற்றுகின்றனர். இவர்கள் அவ்வப்போது போலீஸிடம் பிடிபடுவதும் உண்டு.
முன்னாள் படைவீரர்கள் எண் ணிக்கையில் தமிழகத்திலேயே வேலூர் மாவட்டத்துக்குதான் முதலி டம். இங்கு 40 ஆயிரம் முன்னாள் படைவீரர்கள் உள்ளனர். 18 ஆயிரம் பேருடன் திருவண்ணாமலை மாவட்டம் 2-வது இடத்தில் உள்ளது. வேலூர் மாவட்டத்தில் ராணுவ கேன்டீன் மூலம் மாதம் ஒன்றுக்கு குறைந்தபட்சம் 2 லட்சம் மது பாட்டில்கள் விற்பனையாகின்றன.
தமிழகத்தில் ஒருவேளை மதுவிலக்கு அமலுக்கு வந்தால், இந்த விற்பனை என்ன ஆகும் என்ற சந்தேகம் முன்னாள் படைவீரர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இதுதொடர்பாக தேசிய முன்னாள் படைவீரர் ஒருங்கி ணைப்புக் குழுவின் வேலூர் மாவட்டத் தலைவர் டி.வெங்கடேசய் யாவிடம் கேட்டபோது, ‘‘மாநிலத்தில் மதுவிலக்கு அமலானால் ராணுவ கேன்டீனுக்கும் அது பொருந்தும். கேன்டீனில் மது விற்பனைக்கான உரிமத்தை மாவட்ட ஆட்சியரே ரத்து செய்ய முடியும்’’ என்றார்.
கிருஷ்ணகிரி மாவட்ட முன்னாள் படைவீரர் நலச் சங்கத் தலைவர் எஸ்.சாந்தராஜ் கூறியபோது, ‘‘மத் திய அரசின் கொள்கை முடிவை, மாநில அரசின் கொள்கை முடிவு கட்டுப்படுத்தாது. அதையும் மீறி மாநில அரசு எங்கள் மது உரி மையை பறிக்க நினைத்தால் போராட்டம் நடத்துவோம்’’ என்றார்.
இதுபற்றி மாவட்ட நிர்வாகத்தில் இருக்கும் உயரதிகாரி ஒருவர் கூறும்போது, ‘‘மது விற்பனை, மதுவிலக்கு இந்த இரண்டுமே அரசின் கொள்கை முடிவு சம்பந்தமானது. ஒருவேளை, மதுவிலக்கு அமலுக்கு வரும்பட்சத்தில், ராணுவ கேன்டீன் விற்பனையை என்ன செய்வது என்ற வழிகாட்டுதலையும் அரசே வழங்கும். அரசு உத்தரவை மாவட்ட நிர்வாகம் செயல்படுத்தும்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT