Published : 22 Nov 2019 11:19 AM
Last Updated : 22 Nov 2019 11:19 AM
மதுரை
தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறது. அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றன. அதிமுக, திமுக, பாஜக, காங்கிரஸ், தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் நிர்வாகிகள், தொண்டர்களுடன் ஆலோசனை நடத்தி விருப்ப மனுக்களைப் பெற்று வருகின்றன.
நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்த காங்கிரஸ், உள்ளாட்சித் தேர்தலி லும் கூட்டணியைத் தொடரும் என அக்கட்சித் தலைவர்கள் தெரிவித் தனர். தற்போது திமுக தலைமை யுடன் பேச்சு நடத்த குழுக்கள் அமைப்பதற்கான பணியை மாநிலத் தலைவர் கேஎஸ் அழகிரி தொடங்கியுள்ளார்.
இதற்கிடையே, மதுரையில் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான பணியில் காங்கிரஸார் இறங்கி உள்ளனர். கேகே. நகரிலுள்ள மாவட்ட கட்சி அலுவலகத்தில் கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட விரும்புவோரிடம் விருப்ப மனுக் கள் பெறப்பட்டன. மாவட்டத் தலைவர் கார்த்திகேயன் மற்றும் மாநில நிர்வாகிகள் சையது பாபு, காமராஜர் உள்ளிட்டோர் மனுக்களைப் பெற்று வருகின்றனர். முதல் நாளிலேயே சுமார் 80-க்கும் மேற்பட்டோர் விருப்ப மனுக்களை கட்சியினர் பூர்த்தி செய்து அளித் தனர். நவ., 23-ம் தேதி வரை மாவட்ட அலுவலகத்தில் விருப்ப மனுக்கள் பெறப்படும் என அறிவிக் கப்பட்டுள்ளது. இது குறித்து நிர்வாகிகள் கூறியதாவது: மதுரை மாநகராட்சியின் 100 வார்டுகளிலும் காங்கிரஸ் கட்சி வெற்றி பெறக் கூடிய சில சாதகமான வார்டுகள் உள்ளன. கூட்டணிக் கட்சியான திமுகவிடம் 25 வார்டுகளை கேட்டு பெறுவது பற்றி கட்சியின் தலைமையிடம் வலியுறுத்தி உள்ளோம். தென்மாவட்டத்தில் மதுரை முக்கியமான மாநகராட்சி என்பதால் இங்கு துணை மேயர் வாய்ப்பை எங்களுக்கு விட்டுக் கொடுக்க திமுகவிடம் வலியுறுத்து வோம். மதுரை நகரில் வார்டு கள் மறுவரையறை என்ற பெயரில் காங்கிரஸ் வெற்றி பெறும் சில வார்டுகள் மாற்றப்பட் டுள்ளன. குறிப்பாக செனாய் நகர் பகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் வெற்றிபெறும் வார்டாகவே இருந்தது. தற்போது அது மாற்றப் பட்டுள்ளது. இதே போன்று மகப்பூ பாளையம் பகுதியில் குறிப்பிட்ட மதத்தினர் அதிகம் வசிக்கும் வார்டுகளும் பிற சமூகத்தினருக்கு ஒதுக்கப்பட்டு ள்ளது, என்றுகூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT