Published : 21 Nov 2019 09:41 AM
Last Updated : 21 Nov 2019 09:41 AM
தமிழகத்தில் நடைபெற்ற சிலைக் கடத்தல்கள் தொடர்பாக கடந்த 2019 ஜூலையில் நக்கீரன் இதழில் செய்தி ஒன்று வெளியானது. அந்த செய்தி, தமிழக அரசுக்கும் அமைச் சர்களுக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் உள்நோக்கத்துடன் வெளியிடப்பட்டதாக அமைச்சர் சி.வி.சண்முகம் குற்றம்சாட்டினார். மேலும், உண்மைக்கு புறம்பான, ஆதாரமற்ற செய்தியை வெளியிட்ட நக்கீரன் ஆசிரியர் கோபால், தாமோதரன் மற்றும் பிரகாஷ் ஆகி யோர் மீது இந்திய தண்டனைச் சட்டம் 499, 500, 501 ஆகிய பிரிவுக ளின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண் டும் எனக் கோரி, கடந்த ஆகஸ்ட் 8-ம் தேதி திண்டிவனம் குற்றவியல் நீதிமன்றம் 2-ல் குற்றவியல் நடுவர் நளினிதேவியிடம் புகார் அளித்தார்.
இதைத் தொடர்ந்து, நக்கீரன் இதழின் ஆசிரியர் கோபால் நீதிமன் றத்தில் ஆஜராக குற்றவியல் நடுவர் நளினிதேவி உத்தரவிட்டிருந்தார். அதன்படி நேற்று அவர் நீதிமன்றத் தில் ஆஜரானார். ஆனால் குற்றவி யல் நடுவர் நளினிதேவி விடுமுறை யில் உள்ளதால் வழக்கு டிச.10-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT