Published : 18 Mar 2014 12:14 PM
Last Updated : 18 Mar 2014 12:14 PM
மக்களவை தேர்தலை ஒட்டி திமுக தலைவர் கருணாநிதி மேற்கொள்ளவிருக்கும் பிரச்சார பயணத்திற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
அதில், ஏப்ரல் 5-ம் தேதி தொடங்கி மே 21-ம் தேதி வரை கருணாநிதி பிரச்சாரம் மேற்கொள்கிறார் என அறிவிக்கப்பட்டுள்ளது. கோவையில் பிரச்சாரத்தை தொடங்குகிறார் கருணாநிதி.
இது தொடர்பாக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்: "ஏப்ரல் 5-ம் தேதி கோயம்பத்தூர், 6-ம் தேதி திருப்பூர் மற்றும் ஈரோடு, 7-ம் தேதி சேலம், 10-ம் தேதி புதுச்சேரி, கடலூர் மற்றும் சிதம்பரம் ஆகிய தொகுதிகளிலும், 11-ம் தேதி மயிலாடுதுறை மற்றும் திருவாரூரிலும், 12-ம் தேதி தஞ்சாவூரிலும், திருச்சியிலும், 13-ம் தேதி துவரங்குறிச்சி மற்றும் மதுரையிலும், 16-ம் தேதி வேலூர், ஸ்ரீபெரும்புதூர் தொகுதிகளிலும், 17-ம் தேதி காஞ்சிபுரம் மாவட்டம், 19-ம் தேதி திருவள்ளூர் மற்றும் வடசென்னை, 20-ம் தேதி தென் சென்னை என பிரச்சாரம் செய்கிறார். கடைசியாக ஏப்ரல் 21-ல் மத்தியச் சென்னையில் கருணாநிதி பிரச்சாரத்தை முடிக்கிறார்". இவ்வாறு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT