Published : 18 Nov 2019 10:03 AM
Last Updated : 18 Nov 2019 10:03 AM
உள்ளாட்சித் தேர்தல் தேதி எந்த நேரத்திலும் அறிவிக்கப்படலாம் என்ற நிலையில் தமிழக அமைச் சரவைக் கூட்டம் முதல்வர் பழனி சாமி தலைமையில் நாளை (நவம் பர் 19) நடைபெறவுள்ளது.
சென்னை தலைமைச் செயலகத் தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணிக்கு முதல்வர் பழனி சாமி தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்கின்றனர்.
தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடு களை மாநிலத் தேர்தல் ஆணையம் தீவிரமாக மேற்கொண்டு வரு கிறது. அதிமுக, திமுக, பாஜக, தேமுதிக உள்ளிட்ட அரசியல் கட்சி கள் உள்ளாட்சித் தேர்தலில் போட்டி யிட விரும்பும் கட்சியினரிடம் இருந்து விருப்ப மனுக்களை பெற்று வருகின்றன. உள்ளாட்சித் தேர்தல் தேதி எந்த நேரத்திலும் அறிவிக்கப் படலாம் என்ற நிலையில் அமைச் சரவைக் கூட்டம் நடைபெறுவது முக்கியத்துவம் வாய்ந்த நிகழ் வாகக் பார்க்கப்படுகிறது.
தற்போதைய சட்ட விதிகளின் படி மாநகராட்சி மேயர், நகராட்சி, பேரூராட்சித் தலைவர்கள் மக் களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப் படுகிறார்கள். இதை மாற்றி வார்டு உறுப்பினர்கள் மூலம் மேயர், நக ராட்சி, பேரூராட்சித் தலைவர்களை மறைமுகமாகத் தேர்ந்தெடுக்க அதிமுக அரசு திட்டமிட்டுள் ளது. இதற்காக அவசரச் சட்டம் கொண்டுவர நாளை அமைச் சரவைக் கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது. பாமக, பாஜக, தேமுதிக, தமாகா போன்ற கூட்டணி கட்சிகள் அதிக மான மேயர், நகராட்சித் தலைவர் பதவிகளை கேட்டு வருவதால் இப்பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடத்த அதிமுக அரசு திட்டமிட்டுள் ளதாக அக்கட்சியினர் தெரிவிக் கின்றனர். மறைமுக தேர்தல் நடை பெற்றால் எந்தக் கட்சிக்கு அதிகமான கவுன்சிலர்கள், வார்டு உறுப்பினர்கள் இருக்கிறார்களோ அந்தக் கட்சியைச் சார்ந்தவரே மேயர், நகராட்சி, பேரூராட்சித் தலைவராக முடியும்.
தமிழ்நாடு மாநில தகவல் ஆணை யராக இருந்த ஷீலா பிரியா ஓய்வு பெற்றதால் அப்பதவி தற்போது காலியாக உள்ளது. புதிய தகவல் ஆணையர் நியமிக்க ஓய்வுபெற்ற அதிகாரிகளின் பெயர்களை அரசு பரிசீலித்து வருகிறது. இதுதொடர் பாக அமைச்சரவைக் கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்படவுள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு முதல்வர் பழனிசாமி இங்கிலாந்து, அமெரிக்கா, துபாய் ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற் கொண்டார். அப்போது ரூ. 8 ஆயி ரம் கோடி முதலீடு செய்வதற்கான 30 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. அதுபோல கடந்த ஜனவரி 23, 24 தேதிகளில் நடைபெற்ற 2-வது உலக முதலீட் டாளர்கள் மாநாட்டில் ரூ. 3 லட்சத்து 431 கோடி முதலீடுகளுக்கான 304 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்ட நிறு வனங்களுக்கு தொழில் தொடங்க படிப்படியாக தமிழக அரசு அனு மதி அளித்து வருகிறது. கடந்த 7-ம் தேதி நடைபெற்ற தமிழக அமைச் சரவைக் கூட்டத்தில் புதிதாக தொழில் தொடங்க 7 நிறுவனங் களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. பல்வேறு தொழில் நிறுவனங்களின் விரிவாக்கத்துக்கும் அனுமதி அளிக் கப்பட்டது. உள்ளாட்சித் தேர்தல் நடைபெற இருப்பதால் முக்கியத் திட்டங்களை விரைந்து முடிக்கவும் முடிவு எடுக்கப்பட்டது. இது குறித் தும் நாளை அமைச்சரவைக் கூட் டத்தில் விவாதிக்கப்பட உள்ளன.
தமிழக சட்டப்பேரவையின் குளிர்கால கூட்டத் தொடரை கூட்டி நீட் நுழைவுத் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வலியுறுத்தி சட்ட மசோதா நிறைவேற்றி மீண்டும் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்ப வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாகவும் முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலமா என்பது குறித்து விளக்கம் அளிக்க தமிழக அரசின் தலைமைச் செயலாளருக்கு தேசிய எஸ்.சி. ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள் ளது குறித்தும் அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட இருப் பதாகக் கூறப்படுகிறது.
வடகிழக்கு பருவ மழைக் காலம் என்பதால் பெருமழை, வெள்ளம், புயல் பாதிப்புகளில் இருந்து மக் களைப் பாதுகாக்கவும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கவும் உயர் அதிகாரிகள் நிய மிக்கப்பட்டுள்ளனர். இதுதொடர் பாக முதல்வர் பழனிசாமி தலைமை யில் ஆலோசனை கூட்டங்களும் நடைபெற்றுள்ளன. மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் அமைச்சரவைக் கூட்டத் தில் விவாதிக்கப்பட இருப்பதாக தமிழக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment