Published : 18 Nov 2019 08:50 AM
Last Updated : 18 Nov 2019 08:50 AM
‘அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை உருவாக்கியவர்களில் நானும் ஒருவன். தற்போது பெரும் பான்மையினர் அந்த இயக்கத் தைவிட்டு வெளியேறி விட்டதால், அமமுக கலைக்கப்பட்டது’ என்று வா.புகழேந்தி தெரிவித்தார்.
தஞ்சாவூரில் நேற்று போட்டி அமமுக தஞ்சாவூர் மண்டல ஆலோசனைக் கூட்டம் குத்தாலம் ஒன்றியச் செயலாளர் கஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில், தமிழகம் மற்றும் புதுச்சேரியின் பல்வேறு மண்டலங் களில் இருந்தும் அமமுகவின் அதிருப்தியாளர்கள் 300-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
இக்கூட்டத்தில் நிறைவேற்றப் பட்ட தீர்மானங்கள் குறித்து செய்தி தொடர்பாளர் வா.புகழேந்தி கூறியது: முதல்வர் பழனிசாமி தலைமையில் சிறப்பாக ஆட்சி நடைபெற்று வருகிறது. உள்ளாட் சித் தேர்தலில் ஆளும் அதிமுகவி னர் 80 சதவீத இடங்களில் வெற்றி பெறுவார்கள். துணை முதல்வர் வெளிநாட்டு பயணம் முடிவடைந்து வந்ததும், சென்னையில் நடைபெ றும் நிகழ்ச்சியில் அமமுகவின் அதிருப்தியாளர்கள் அனைவரும் அதிமுகவில் இணைய உள்ளோம்.
தினகரன் அரசியல் நடத்த தெரியாதவர். அவரை இவ்வளவு நாட்களாக நாங்கள் தலைவராக ஏற்றுக் கொண்டதற்கு வருத்தம் தெரிவிக்கிறோம். உள்ளாட்சித் தேர்தலுக்கு பிறகு தினகரனின் அரசியல் கதை முடிந்துவிடும். உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட அதிமுக, திமுகவினர் விருப்ப மனுவை பெற்று வருகின்றனா். ஆனால், அரசியல் இயக்கம் நடத்துவதாக கூறும் தினகரன் விருப்ப மனு வாங்கினாரா? தனது இயக்கத்தை கட்சியாக மாற்ற அவருக்கு விருப்பமில்லை. அந்த இயக்கத்துக்கு உறுப்பினர் அட்டை கிடையாது.
அமமுகவை ஆரம்பிக்க துணை நின்றவர்களில் நானும் ஒருவன். அந்த இயக்கத்தை விட்டு நாள்தோறும் பெரும்பாலானோர் வெளியேறிவிட்டனர். எனவே, அமமுக இன்று முதல் கலைக்கப் பட்டுள்ளது. இதுகுறித்து நான் தேர்தல் ஆணையத்துக்கு கடந்த 23-ம் தேதி கடிதம் அனுப்பிவிட் டேன். இனிமேல் அமமுக பெயரை யாராவது பயன்படுத்தினால், நீதி மன்றம் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்.
தினகரனை தவிர்த்து யார் வந்தாலும் அதிமுகவில் சேரலாம். சசிகலா அதிமுகவுக்கு வருவது அவரது விருப்பம் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment