Published : 17 Nov 2019 12:00 PM
Last Updated : 17 Nov 2019 12:00 PM
மதுரை
தமிழகத்தில் குறிப்பிட்ட அளவை விட மழை கூடுதலாகப் பெய்த தோடு சாகுபடி பரப்பும் குறைந்த தால் வெங்காயத்துக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு, அதன் விலை ‘கிடுகிடு’ வென உயர்ந்து வருகிறது.
தமிழகத்தில் பெரிய வெங் காயத்துடன் ஒப்பிடும்போது சின்ன வெங்காயம் சாகுபடி பரப்பு குறை வாகவே உள்ளது. வெங்காயம் இரண்டு, மூன்று மழையை நம்பி வறட்சியில் விதைக்கக் கூடிய மானாவாரி பயிர். தமிழகத்தில் பெரம்பலூர், அரியலூர், திருவண் ணாமலை, திண்டுக்கல், மதுரை, திருநெல்வேலி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் குறைந்த நீர் ஆதாரத்தைக் கொண்டு, பெரிய வெங்காயம், சின்ன வெங்காயம் ஆகியவை அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகின்றன.
சமையலில் சைவம், அசைவம் என அனைத்து காய்கறி, குழம்பு வகைகளுக்கும் வெங்காயம் ஒரு முக்கிய உணவுப் பொருள் என்பதால், ஆண்டு முழுவதுமே வெங்காயத்துக்கு தேவை இருந்து கொண்டே இருக்கிறது. ஆனால், தற்போது உள்நாட்டுச் சந்தையில் பெரிய வெங்காயம், சின்ன வெங் காயத்தின் இருப்பு குறைந்து விட்டது. சந்தைகளுக்கு வரத்து குறைந்து விட்டதால் சின்ன வெங் காயம், பெரிய வெங்காயம் விலை இயல்பாக உயர்ந்து விட்டது.
சின்ன வெங்காயம் ரூ.80
மதுரையில் சின்ன வெங்காயம் கிலோ ரூ.80-க்கும், பெரிய வெங்காயம் ரூ.70-க்கும் விற்கப் படுகிறது. திண்டுக்கல்லில் பெரிய வெங்காயம் ரூ.70, சின்ன வெங் காயம் ரூ.68-க்கு விற்கப்படுகிறது. சில்லறை விற்பனைக் கடைகளில் வெங்காயம் கிலோ ரூ.100-க்கு விற்கப்படுவதால் பெண்கள் அதிர்ச்சி அடைந்து வெங்காயம் வாங்காமலேயே திரும்புகின்றனர்.
இதுகுறித்து வேளாண்துறை அதிகாரிகள் கூறியதாவது: மழை அதிகம் பெய்யும்போது வெங்காய விளைச்சல் குறைவது வழக்கமானதுதான். இந்த ஆண்டு வழக்கத்துக்கு மாறாக அதிகமான மழை பெய்தவுடன் விவசாயிகள் வெங்காய சாகுபடியை கைவிட்டு மாற்று பயிர் விவசாயத்தை நாடத் தொடங்கி விட்டனர். அதனால், சாகுபடி பரப்பு குறைந்து விளைச்சலும் இல்லாததால் சந்தைகளில் வெங்காயத்துக்கு தட்டுப்பாடு அதிகரித்துள்ளது.
பெரிய வெங்காயத்தின் விலை கடந்த மே மாதத்தில் இருந்தே தொடர்ந்து உயர்ந்து வருகிறது. முன்பு குவிண்டால் ரூ.3 ஆயிரத் துக்கு விற்ற வெங்காயம் தற்போது ரூ.5 ஆயிரமாக உள்ளது.
அண்டை மாநிலங்களில் இருந் தும், வெளிநாடுகளில் இருந்தும் வெங்காயம் வாங்குவதற்கு முயற்சிகள் நடக்கிறது. ஈரான், ஈராக்கில் வெங்காயம் அதிகளவு சாகுபடி செய்யப்படுகிறது. அங் கிருந்து கப்பல் மூலம் வாங்கு வதற்கான முயற்சிகள் நடக்கின் றன. வெங்காயம் விலை உடனே சீரடையாது. வெங்காயத்தை வாங்குவதில் ஏற்பட்டுள்ள கால தாமதத்தால் பெரிய வெங்காயம், சின்ன வெங்காயம் விலை உயர்ந்துள்ளது. 15 நாட்களில் வெங்காய தட்டுப்பாடு சீராகும் வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment