Published : 17 Nov 2019 11:01 AM
Last Updated : 17 Nov 2019 11:01 AM

குஜராத்திலிருந்து 27,500 டன் உப்பு தமிழகம் வருகை: விலை குறையும் என தூத்துக்குடியில் உற்பத்தியாளர்கள் கவலை

தூத்துக்குடி

குஜராத் மாநிலத்தில் இருந்து கப்பல் மூலம் 27,500 டன் உப்பு தூத்துக்குடி வந்துள்ளது. இதனால், தமிழகத்தில் உப்பின் விலை குறைய வாய்ப்புள்ளதால், தூத்துக்குடியைச் சேர்ந்த உப்பு உற்பத்தியாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.

நாட்டின் உப்பு உற்பத்தியில் குஜராத் மாநிலத்துக்கு அடுத்தபடி யாக 2-வது இடத்தில் தூத்துக்குடி மாவட்டம் உள்ளது. இங்கு ஆண்டுக்கு சராசரியாக 25 லட்சம் டன் உப்பு உற்பத்தியாகிறது. நடப்பாண்டு பல்வேறு சூழ்நிலை களால் 60 சதவீதம் (15 லட்சம் டன்) உப்பு மட்டுமே உற்பத்தி யாகியுள்ளது. இதில், 10 லட்சம் டன் உப்பு ஏற்கெனவே விற்பனையாகி விட்டது. 5 லட்சம் டன் உப்பு உப் பளங்களில் கையிருப்பில் உள்ளது.

மழைக்காலம் தொடங்கியிருப் பதால் உப்பு விலை அதிகரித் துள்ளது. தூத்துக்குடியில் உற்பத்தி யாகும் உப்பு டன்னுக்கு ரூ.1,400 முதல் ரூ.1,500 வரை விலை போவதால் உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

இந்நிலையில், தமிழகத்தைச் சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்று, குஜராத் மாநிலத்தில் இருந்து 27,500 டன் உப்பை தூத்துக்குடி கொண்டு வந்துள்ளது. கப்பல் மூலம் இந்த உப்பு நேற்று தூத்துக்குடி வஉசி துறைமுகம் வந்து சேர்ந்தது.

இதில், 15 ஆயிரம் டன் உப்பு மேட்டூரில் உள்ள கெம்பிளாஸ்ட் நிறுவனத்துக்கு கொண்டு செல்லப் படுவதாகவும், மீதமுள்ள உப்பை தூத்துக்குடியிலேயே சேமித்து வைக்க அந்நிறுவனம் முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படு கிறது. ப்ரீ புளோ உப்பு (அரவை செய்யப்பட்ட உப்பு) தயாரிக்க குஜராத் உப்பை பயன்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

உற்பத்தியாளர்கள் கவலை

தூத்துக்குடியில் உப்பு விலை உயர்ந்துள்ளதால், தனியார் நிறு வனம் குஜராத் உப்பை குறைந்த விலைக்கு வாங்கி கப்பல் மூலம் கொண்டுவந்துள்ளது. தொடர்ந்து, இதுபோல் குஜராத்தில் இருந்து உப்பு கொண்டு வரப்படும்பட் சத்தில், தூத்துக்குடியில் உற்பத்தி செய்து, சேமித்து வைக்கப்பட் டுள்ள உப்பின் விலை குறைய வாய்ப்புள்ளதாக உற்பத்தியாளர் கள் கவலை தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x