Published : 16 Nov 2019 09:02 AM
Last Updated : 16 Nov 2019 09:02 AM

முதல்வர் பழனிசாமி, டிஜிபி திரிபாதியுடன் ஐஐடி மாணவியின் தந்தை சந்திப்பு: மகள் மரணம் குறித்து உரிய விசாரணை நடத்த வலியுறுத்தல்

முதல்வர் பழனிசாமியை முகாம் அலுவலகத்தில் சந்தித்து, சென்னை ஐஐடியில் பயின்று வந்த தனது மகள் பாத்திமா லத்தீப் உயிரிழந்தது தொடர்பாக உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும் என மனு அளித்த அப்துல் லத்தீப்.

சென்னை

சென்னை ஐஐடியில் தற்கொலை செய்துகொண்ட மாணவி பாத்திமாவின் தந்தை அப்துல் லத்தீப், முதல்வர் பழனிசாமி மற்றும் டிஜிபி திரிபாதி ஆகி யோரை சந்தித்து தனது மகளின் மரணம் தொடர்பாக உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.

கேரள மாநிலம் கொல்லத்தைச் சேர்ந்தவர் பாத்திமா(20). சென்னை கிண்டியில் உள்ள ஐஐடியில் முதலாம் ஆண்டு எம்.ஏ. மானுடவியல் படித்து வந்தார். ஐஐடி வளாகத்தில் உள்ள சரயு விடுதியில் தங்கியிருந்த பாத்திமா, கடந்த 8-ம் தேதி தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

மாநகர காவல் ஆணையர் உத்தரவின்படி இந்த வழக்கை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் விசாரித்து வருகின்றனர். ஐஐடி பேராசிரியர்கள், ஊழியர்களிடம் விசாரணை நடந்து வருகிறது. இதற்கிடையே, பாத்திமா மரணம் குறித்து நியாயமான விசாரணை நடத்த வலியுறுத்தி திமுக, காங்கிரஸ் கட்சிகளின் மாணவர் பிரிவு உட்பட 5 அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் நேற்று ஐஐடி வளாகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

இந்நிலையில், சென்னை வந்த பாத்திமாவின் தந்தை அப்துல் லத்தீப், முதல்வர் பழனிசாமியை சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று மாலை சந்தித்தார். அப்போது, தனது மகளின் மரணம் தொடர்பாக உரிய விசாரணை நடத்துமாறு கோரிக்கை மனு அளித்தார். அவருடன் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் எம்எல்ஏ முகமது அபுபக்கர் சென்றிருந்தார்.

இதுகுறித்து அப்துல் லத்தீப் கூறும்போது, ‘‘என் மகள் தற்கொலை செய்வதற்கு முன்பு கடிதம் எழுதியுள்ளார். இதை கோட்டூர்புரம் போலீஸார் மற்றும் ஐஐடி நிர்வாகத்தினர் மறைத்துவிட்டனர். இது தொடர்பாக நீதிவிசாரணை நடத்த வேண்டும் என்று முதல்வரிடம் கோரிக்கை மனு அளித்து விளக்கினேன். விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக முதல்வர் உறுதி அளித்தார்’’ என்றார், முன்னதாக, அப்துல் லத்தீப் மற்றும் உறவினர்கள், டிஜிபி ஜே.கே.திரிபாதியை சந்தித்துப் பேசினர்.

அப்போது, பாத்திமாவின் மரணத்தில் உள்ள சந்தேகங்களை தெரிவித்து, நியாயமான விசா ரணை நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். அதன்பின், செய்தியாளர் களிடம் லத்தீப் கூறியதாவது: சம்பவத்தன்று இரவு 9.30 மணிவரை கேண்டீனில் இருந்த பாத்திமா, அழுதுகொண்டே எங்களிடம் பேசினார். அவரை யாரோ ஒரு சீனியர் மாணவி தேற்றி அழைத்துச் சென்றுள்ளார். அன்றைய தினத்தில் ஏதோ ஒரு சம்பவம் நடந்துள்ளது. சுதர்சனம் பத்மநாபன் என்ற பேராசிரியரிடம் இருந்து எந்த வகையிலான அச்சுறுத்தல் வந்தது என்பது தெரியவில்லை. காவல்துறையினர் இதுகுறித்து விசாரித்து உண்மையை வெளிக் கொண்டுவர வேண்டும்.

பாத்திமா கொலை செய்யப்பட்டாரா அல்லது தற்கொலை செய்துகொண்டாரா? என்பதுதெரியவில்லை. என் மகள்தற்கொலை செய்ய பயன்படுத்தியகயிறு எப்படி அவருக்கு கிடைத் தது என தெரியவில்லை. அந்தவிடுதியில் உள்ள சிசிடிவிகேமரா பதிவுகள் வேண்டும் என்றுகேட்டும் கிடைக்கவில்லை. இவைதொடர்பாக மேலும் சில ஆதாரங்களை டிஜிபியிடம் அளித்துள்ளேன். விசாரணை நடத்துவதாக டிஜிபி உறுதி அளித்துள்ளார். இவ்வாறு அப்துல் லத்தீப் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x