Published : 16 Nov 2019 07:35 AM
Last Updated : 16 Nov 2019 07:35 AM

செங்கல்பட்டு, தென்காசி உட்பட 5 புதிய மாவட்டங்களுக்கு ஆட்சியர்கள் நியமனம்

சென்னை

செங்கல்பட்டு, தென்காசி, கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர் மற்றும் ராணிப்பேட்டை ஆகிய புதிய மாவட்டங்களுக்கு ஆட்சியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

காஞ்சிபுரத்தை பிரித்து செங்கல்பட்டை தலைமையிடமாக கொண்டும் திருநெல்வேலியை பிரித்துதென்காசியை தலைமையிடமாக கொண்டும் வேலூரை பிரித்து திருப்பத்தூர் மற்றும் ராணிப்பேட்டை பகுதிகளை தலைமையிடமாகக் கொண்டும் விழுப்புரத்தை பிரித்துகள்ளக்குறிச்சியை தலைமையிடமாகக் கொண்டும் 5 புதிய மாவட்டங்கள் உருவாக்குவதற்கான அறிவிப்பை முதல்வர் பழனிசாமி அறிவித்தார்.

எல்லை வரையறைஅதைத் தொடர்ந்து, மாவட்டங்கள் பிரிக்கும் பணி நடைபெற்றது. இப்பணிகளை மேற்கொள்ளஒவ்வொரு மாவட்டத்துக்கும் தனிஅதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். தற்போது பணிகள் முடிந்து, எல்லைகள் வரையறுக்கப்பட்டுள்ளன.

இதையடுத்து அந்த 5 மாவட்டங்களுக்கும் புதிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் நேற்று நியமிக்கப்பட்டனர். இந்நிலையில், தனி அதிகாரிகளாக நியமிக்கப்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகளையே அந்தந்த மாவட்டங்களுக்கான முதல் மாவட்ட ஆட்சியர்களாக நியமித்து தலைமைச் செயலர் கே.சண்முகம் உத்தரவிட்டுள்ளார்.

இதன்படி கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியராக கிரன்குராலா, தென்காசி- ஜி.கே.அருண் சுந்தர் தயாளன், செங்கல்பட்டு- ஏ.ஜான் லூயிஸ், திருப்பத்தூர்- எம்.பி.சிவனருள், ராணிப்பேட்டை- எஸ்.திவ்யதர்ஷிணி ஆகியோர் மாவட்டங்கள் முறையாக செயல்படும் நாளில் இருந்து ஓராண்டுக்கு ஆட்சியர்களாக நியமிக்கப்பட்டுள்ளதாக தலைமைச் செயலர் உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x