Last Updated : 31 Aug, 2015 08:35 AM

 

Published : 31 Aug 2015 08:35 AM
Last Updated : 31 Aug 2015 08:35 AM

ஆந்திர சிறைகளில் 2 ஆண்டுகளாக விசாரணையின்றி வாடும் கல்வராயன்மலையைச் சேர்ந்த 343 பழங்குடியின மக்கள்: சிறையிலேயே 2 பேர் உயிரிழந்ததாக உடல்கள் ஒப்படைப்பு

விழுப்புரம் மாவட்டம் கல்வராயன் மலைப் பகுதியில் வாழும் பழங்குடியினர் 343 பேர் ஆந்திர மாநில சிறைகளில் கடந்த 2 ஆண்டுகளாக எவ்வித விசா ரணையுமின்றி அடைக்கப்பட்டுள்ளனர்.

கல்வராயன்மலைப் பகுதி யைச் சேர்ந்த பழங்குடியினர் ஆந்திர சிறைகளில் அனுபவிக் கும் கொடுமைகளை பாதிக்கப் பட்டவர்களின் உறவினர்கள் 'தி இந்து' உங்கள் குரலில் பதிவு செய் தனர். அதைத் தொடர்ந்து கல்வரா யன் மலைப் பகுதிக்கு நேரில் சென்று விசாரித்ததில் அவர்கள் அனைவ ரும் ஒருமித்தக் குரலில் கூறியது:

2013 டிசம்பர் 16-ம் தேதி திருப்பதிக்குச் சென்றுவிட்டு திரும் பிக் கொண்டிருந்த விழுப்புரம் மாவட்டம் கல்வராயன் மலை யைச் சேர்ந்த சுமார் 370 பழங்குடி யினர் ஆந்திர வனத்துறையினரால் பிடிக்கப்பட்டு திருப்பதி, நெல்லூர், கடப்பா, பீலேரி, காளஸ்திரி மாவட்ட சிறை0களில் அடைக்கப்பட்டுள் ளனர்.

எதற்காக கைது செய்யப்பட் டோம் என்ற விவரம்கூட தெரியாத நிலையில் இவர்களில் புகழேந்தி மற்றும் ஏழுமலை ஆகிய 2 பேர் இறந்துள்ளனர். அவர்களது உடல்கள் மட்டும் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. ஆனால் அவர்கள் எவ்வாறு இறந்தனர் என்ற விவரம் எதையும் ஆந்திர சிறைத் துறையினர் தெரிவிக்கவில்லை.

சிறையில் வாடும் கணவர்களை யும், சகோதரர்களையும் சந்திக்கச் சென்ற பின்புதான் அவர்கள் அனைவரும், ஆந்திர வனச் சரக காவலர்கள் 2 பேர் 2013 டிசம்பர் 15-ம் தேதி மர்மமான முறையில் கொல்லப்பட்ட வழக்கின்கீழ் கைது செய்யப்பட்டிருப்பதாக அறிந்துள் ளனர்.

கல்வராயன் மலைவாழ் கிராமத் தைச் சேர்ந்த ஆண்கள் ஆந்திர சிறையில் வாடிக்கொண்டிருக்க, ஒருபுறம் பெற்ற பிள்ளைகளைக் கரையேற்றவும், மறுபுறம் சிறையில் உள்ள கணவன்மார்களை மீட்கவும் கடந்த 2 ஆண்டுகளாக கல்வராயன் மலைப் பகுதி பெண்கள் அவ்வப் போது பெங்களூர், கேரளா என அண்டை மாநிலங்களுக்கு இடம்பெயர்ந்து, கூலித்தொழில் செய்து வாழ்க்கையை நடத்தி வருகின்றனர்.

இவர்களது நிலையை அறிந்த அகில இந்திய மக்கள் மேடை அமைப்பினர் இவர்களுக்கு உதவி செய்ய முன்வந்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்களை அழைத்துக் கொண்டு அடுத்தவாரம் தலைமைச் செயலகத்தில் அனைத்துக் கட்சி எம்எல்ஏ-க்களை சந்திக்கவுள்ளனர்.

திருமணமான 2 மாதத்தில்..

இந்நிலையில் திருமணமான 2 மாதத்தில் ஆந்திர வனத்துறையால் சிறைபிடிக்கப்பட்ட அன்பழகனின் மனைவி ராதா என்பவர் ‘தி இந்து' விடம் கூறியதாவது:

"திருமணமான கையோடு திருப்பதிக்கு சென்றிருந்தோம், கோயிலுக்குச் சென்றுவிட்டு வீடு திரும்புவதற்காக திருப்பதி பேருந்து நிலையத்தில் நின்றிருந்தபோது எனது கணவரை போலீஸார் அழைத்துச் சென்றுவிட்டனர். அங்கிருந்து நான் தனியாகத்தான் ஊருக்குத் திரும்பினேன்.

தற்போது எனக்கு யாரும் ஆதரவு இல்லை" என்றார்.

பாப்பாத்தி என்பவர் கூறும் போது, "எனது கணவர் சிறையில் உள்ளார். எனது பிள்ளைகளை வைத்துக் கொண்டு மிகவும் சிரமப் படுகிறேன். ஒவ்வொரு முறையும் அவரைப் பார்க்கச் செல்லும் போது ரூ.5 ஆயிரம் வரை செலவாகிறது. அவரை மீட்பதற்காக வக்கீலுக்கு மட்டும் ரூ.50000 செலவழித்துள் ளேன். ஆனால் இதுவரை மீட்க முடியவில்லை" என்று தெரிவித்தார்.

இந்நிலையில் அகில இந்திய மக்கள் மேடை அமைப்பின் அன் பழகன் கூறும்போது, தமிழக மலைவாழ் மக்களின் அறி யாமையை ஆந்திர வனத்துறை யினர் தங்கள் சுயநலத்துக்காக பயன்படுத்துகின்றனர். ஆந்திர வனத்துறையினரால் கைது செய் யப்பட்ட 370 பேரில் 25 பேர் ஆந்திர மலைவாழ் மக்கள். அவர்கள் அனைவரும் ஜாமீனில் விடப்பட் டுள்ளனர். ஆனால் எஞ்சிய 343 தமிழர்களுக்கும் ஜாமீன் கிடைக்க வில்லை.

இவர்களை ஜாமீனில் எடுப் பதிலும் சிக்கல் உள்ளது. ஜாமீ னில் எடுக்க உள்ளூர்காரர்கள் இருவர் கையெழுத்திடவேண்டும். 343 பேருக்கும் ஜாமீன் கொடுக்க ஆந்திராவில் எவரும் முன்வர வில்லை. உண்மையில் வனச் சரக அலுவலர்களை கொன்றது யார் என்பது தெரியாத நிலையில் 343 பேரை கைதுசெய்து 2 ஆண்டுகளாக சிறைவைத்துள் ளனர்.

இதுவரை எவ்வித விசாரணை யும் நடத்தப்படவில்லை. ஆந்திரக் காவல் துறையினர் தமிழர்களை நடத்தும் விதம் மிகவும் மோசமாக உள்ளது. புகழேந்தி மற்றும் ஏழுமலை இறந்த செய்தியைக்கூட சொல்லாமல் சடலத்தைக் கொண்டு வந்து கொடுத்துவிட்டு சம்பந்தப்பட்டவரிடம் கையெழுத் துப்பெற்றுச் சென்றுள்ளனர்.

மேலும் சிறையில் உள்ள கணேஷ் என்பவரின் தந்தை இறந்த நிலையில் அவருக்கு பரோல் கேட்டபோதுகூட அனுமதிக்கவில்லை. கைது செய்யப்பட்டப்பட்டவர்களில் 17 வயது சிறுவனும் உள்ளான்.

ஆந்திர சிறையில் உள்ள கல்வராயன் மலைவாழ் பழங்குடியினரை தமிழக அரசால் மட்டுமே மீட்டெடுக்க முடியும் என்பதால் அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகளை சந்தித்து மனுக்கொடுக்கத் திட்டமிட்டுள்ளோம் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x