Published : 13 Nov 2019 12:05 PM
Last Updated : 13 Nov 2019 12:05 PM

செங்கல்பட்டு, திருப்பத்தூர், தென்காசி, ராணிப்பேட்டை ; 4 புதிய மாவட்டங்கள் உதயம் : கோட்டங்கள், தாலுகாக்கள் முழுவிபரம்

சென்னை

சமீபத்தில் பிரித்து அறிவிக்கப்பட்ட செங்கல்பட்டு, தென்காசி, திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய நான்கு மாவட்டங்கள் புதிய மாவட்டங்களாக உருவாக்கப்பட்டதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஏற்கெனவே 32 மாவட்டங்கள் இருந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் புதிதாக கள்ளக்குறிச்சி மாவட்டம் உருவானது. இந்நிலையில் செங்கல்பட்டு, தென்காசி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய 4 மாவட்டங்கள் புதிதாக பிரிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது.

காஞ்சிபுரம், வேலூர், திருநெல்வேலி ஆகிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு, செங்கல்பட்டு, தென்காசி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய 4 புதிய மாவட்டங்கள் உருவாக்கப்படும், என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். இதன்படி, 4 புதிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு, அதுகுறித்த அரசாணையை, நவம்பர் 12-ம் தேதியிட்டு, வருவாய் நிர்வாகத்துறை வெளியிட்டுள்ளது.

இதன்படி, காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம், செங்கல்பட்டு என இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம்:

1. காஞ்சிபுரம் மாவட்டம்: தலைநகர் - காஞ்சிபுரம், 2 வருவாய் கோட்டங்கள் (காஞ்சிபுரம் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் ), 5 தாலுகாக்கள்( காஞ்சிபுரம், உத்திரமேரூர், ஸ்ரீபெரும்புதூர், வாலாஜாபாத், குன்றத்தூர்(புதியது))

2. செங்கல்பட்டு மாவட்டம் : தலைநகர் செங்கல்பட்டு. 3 வருவாய் கோட்டங்கள் (செங்கல்பட்டு, தாம்பரம், மதுராந்தகம் ) 8 தாலுக்காக்கள் ( செங்கல்பட்டு,பல்லாவரம், தாம்பரம், வண்டலூர், மதுராந்தகம், செய்யூர், திருக்கழுக்குன்றம், திருப்போரூர்)

திருநெல்வேலி மாவட்டம்:

திருநெல்வேலி மாவட்டம் திருநெல்வேலி, தென்காசி என இரண்டு மாவட்டங்களாக பிரிக்கப்படுட்டுள்ளது.

1. திருநெல்வேலி மாவட்டம் : தலைநகர்- திருநெல்வேலி , 2 வருவாய் கோட்டங்கள்(திருநெல்வேலி, சேரன்மாதேவி), 8 தாலுக்காக்கள்( திருநெல்வேலி, சேரன்மாதேவி, மானூர், பாளையங்கோட்டை, நாங்குநேரி, ராதாபுரம், திசையன்விளை, அம்பாசமுத்திரம்).

2. தென்காசி மாவட்டம் : தலைநகர் - தென்காசி , 2 வருவாய் கோட்டங்கள்(தென்காசி, சங்கரன்கோவில்), 8 தாலுக்காக்கள் (தென்காசி, சங்கரன்கோவில்,செங்கோட்டை, கடையநல்லூர், சிவகிரி, வீரகேரளம்புதூர், திருவேங்கடம், ஆலங்குளம்).

வேலூர் மாவட்டம்:

வேலூர் மாவட்டம் மூன்றாக பிரிக்கப்பட்டுள்ளது. 1.வேலூர், 2.திருப்பத்தூர், 3.ராணிப்பேட்டை என மூன்று மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.

1.வேலூர் மாவட்டம்: தலைநகர் -வேலூர், 2 வருவாய் கோட்டங்கள் (வேலூர், குடியாத்தம்) 6 தாலுகாக்கள் (வேலூர், குடியாத்தம், அணைக்கட்டு, காட்பாடி, பேரணம்பட்டு, கே.வி.குப்பம்)

2.திருப்பத்தூர் மாவட்டம்: தலைநகர் - திருப்பத்தூர், வருவாய்க்கோட்டங்கள் (திருப்பத்தூர், வாணியம்பாடி), 4 தாலுக்காக்கள் (திருப்பத்தூர், வாணியம்பாடி, ஆம்பூர், நாட்ராம்பள்ளி)

3.ராணிப்பேட்டை மாவட்டம்: தலைநகர்- ராணிப்பேட்டை 2-வருவாய் கோட்டங்கள் (ராணிப்பேட்டை, அரக்கோணம்) 4 தாலுக்காக்கள் (வாலாஜா, அரக்கோணம்,நெமிலி,ஆற்காடு).

மேற்கண்ட அரசாணையை பேரிடர் மேலாண்மை மற்றும் வருவாய் நிர்வாகத்துறை முதன்மைச் செயலர் ககன்திப் சிங் பேடி பிறப்பித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x