Last Updated : 08 Nov, 2019 01:55 PM

 

Published : 08 Nov 2019 01:55 PM
Last Updated : 08 Nov 2019 01:55 PM

திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் யானை பராமரிப்பு விவகாரம்: முறைப்படி வனத்துறைக்கு விண்ணப்பித்துள்ளதாக கோயில் நிர்வாகம் விளக்கம்

ஜெயமால்யா யானை

திருவில்லிபுத்தூர்

விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் பராமரிக்கப்பட்டு வரும் யானை பெயர் மாற்றம் மற்றும் பராமரிப்பு கால நீட்டிப்புக்காக முறையான ஆவணங்களுடன் வனத்துறைக்கு விண்ணப்பிக்கப்பட்டுள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சிறப்புமிக்க திருவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் கோவிலில் 2008-ம் ஆண்டு முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் வழங்கப்பட்ட ஜெயமால்யா என்ற யானை பராமரிக்கப்பட்டு வருகிறது.

இந்த யானை கோயில் நிர்வாகத்தால் முறையான ஆவணங்கள் இன்றி பராமரிக்கப்பட்டு வருவதாக சென்னையைச் சேர்ந்த வனவிலங்கு ஆர்வலர் கிளமன்ட் ரூபின் என்பவர் தகவல் உரிமை சட்டத்தின் மூலம் தெரிவிக்கப்பட்ட தகவல்களின் மூலம் சர்ச்சைகள் எழுந்தது.

இதுகுறித்து திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் செயல் அலுவலர் இளங்கோவன் கூறியபோது, "பல்வேறு சிறப்புகளை உடைய ஆண்டாள் கோயிலில் பராமரிக்கப்பட்டு வரும் யானை ஜெயமால்யா குறித்து வெளியான தகவல்கள் பொய்யானது. தவறான இந்த தகவல்கள் வருத்தமளிக்கிறது. சௌமிய நாராயண பெருமாள் டிரஸ்ட் மூலம் திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலுக்கு உபயமாக இந்த யானை பெறப்பட்டது.

கடந்த 2013-ம் ஆண்டு பெயர் மாற்ற அனுமதி மற்றும் பராமரிப்பு காலநீட்டிப்பு செய்வதற்காக சென்னையில் உள்ள தலைமை வன உயிரின பாதுகாவலருக்கு உரிய ஆவணங்களுடன் முறையாக விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. அந்த ஆவணம் வனத்துறையின் கோப்பில் இருந்து வருகிறது. பெயர் மாற்றம் மற்றும் பராமரிப்பு நீட்டிப்பு காண அனுமதி வழங்குவதில் வனத்துறை காலதாமதம் செய்து வருகிறதே தவிர யானை பராமரிப்பில் எந்த விதிமுறை மீறல்களும் இல்லை" எனத் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x