Last Updated : 04 Nov, 2019 05:42 PM

 

Published : 04 Nov 2019 05:42 PM
Last Updated : 04 Nov 2019 05:42 PM

மானாமதுரையில் புலி பதுங்கல்?- மக்கள் அச்சம்- தேடுதல் வேட்டையில் வனத்துறையினர்

மானாமதுரை

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே புலியை பதுங்கியுள்ளதாக மக்கள் கூறியதை அடுத்து வனத்துறையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

மானாமதுரை அருகே கால்பிரவு கிராமத்தையொட்டி வைகை ஆற்றங்கரையில் கீழமேல்குடி கூட்டு குடிநீர் திட்டம் உள்ளது. இங்கு மோட்டாரை இயக்குவதற்காக இன்று காலை 8:30 மணிக்கு வீரகல்யாணி (50) சென்றுள்ளார்.

அந்த சமயத்தில் வைகை ஆற்றில் இருந்து புலி போன்ற விலங்கு ஒன்று சுப்பையா என்பவரது தோட்டத்திற்கு சென்றுள்ளது. இதை பார்த்த வீரகல்யாணி மோட்டாரை இயக்காமல் அங்கிருந்து ஊருக்குள் ஓடினர்.

தகவலறிந்து வந்த மாவட்ட வன அலுவலர் ராமேஸ்வரன், டிஎஸ்பி கார்த்திகேயன், எஸ்ஐ மாரிக்கண்ணன் மற்றும் தீயணைப்புத் துறையினர் அப்பகுதியில் புலியை தேடி வருகின்றனர். தொடர்ந்து அப்பகுதியில் பட்டாசுகளை வெடித்து தேடி வருகின்றனர்.

மேலும் அவர்களுடன் இணைந்து கிராமமக்களும் தேடினர். வைகை ஆற்றில் பார்த்தபோது விலங்கு சென்றதற்கான ஒரே ஒரு கால் தடம் மட்டும் இருந்தது. ஆனால் அது புலி கால் தடம் போன்று இல்லை என வனத்துறையினர் கூறினர். இதுவரை அந்த விலங்கை பிடிக்க முடியாததால் கிராமமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

மாவட்ட வன அலுவலர் ராமேஸ்வரன் கூறுகையில், ‘ அப்பகுதியில் புலி வருவதற்கான சாத்தியமில்லை. அதற்கான தடமும் இல்லை,’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x