Published : 03 Nov 2019 07:57 AM
Last Updated : 03 Nov 2019 07:57 AM
ஒய்.ஆண்டனி செல்வராஜ்
மதுரை
மழைக்காலம் தொடங்கிவிட்டதால் ஒருங்கிணைந்த மதுரை மாவட்டத் தில், மல்லிகைப் பூ உற்பத்தி 60 சதவீதம் வரை வீழ்ச்சி அடைந் துள்ளது. அதனால், சந்தைகளுக்கு வரத்து குறைந்து நிலக்கோட்டை சந்தையில் கிலோ ரூ.2,500 முதல் ரூ.3 ஆயிரம் வரையும், மதுரை, உசிலம்பட்டியில் கிலோ ரூ.2 ஆயி ரம் வரையும் விற்பனையானது.
தமிழகத்தில் மல்லிகைப்பூ ஏறக் குறைய 50 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்படுகிறது. மதுரை, திண்டுக் கல், ராமநாதபுரம், கடலூர், ஈரோடு, கிருஷ்ணகிரி மற்றும் ஓசூர் உள் ளிட்ட பகுதிகளில் மல்லிகைப்பூ அதிகம் விளைவிக்கப்படுகிறது. இதில் ஒருங்கிணைந்த மதுரை மாவட்டத்தில் (மதுரை, திண் டுக்கல், ராமநாதபுரம்) விளையும் மல்லிகைக்கு ‘புவிசார் குறியீடு’ கிடைத்துள்ளது.
பளீரிடும் வெண்மை நிறத்தில், குண்டு குண்டாக முழுவதுமாக விரியாமல், மற்ற இடங்களில் உற்பத்தியாகும் பூக்களை விட அதிக மணம் கொண்டது. அதனால், உள்ளூர் சந்தை முதல் பிற மாநில, வெளிநாட்டு சந்தைகள் வரை மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம் மாவட்டங்களில் விளையும் மதுரை மல்லிகைக்கு மவுசு அதிகம்.
மதுரையில் மல்லிகைப் பூ சுமார் 5 ஆயிரம் ஏக்கரில் ஆண்டு முழுவதும் உற்பத்தி செய்யப் படுகிறது. இங்குள்ள மண் வள மும், சீதோஷ்ண நிலையும் மல் லிகை உற்பத்திக்கும், சிறப்புக்கும் உகந்ததாக உள்ளது. கடந்த சில ஆண்டாக மதுரையில் போதிய மழையின்றி நீர் நிலைகளில் தண் ணீர் குறைந்ததால் மல்லிகைப் பூ முன்புபோல அதிக அளவில் உற்பத்தி ஆவதில்லை.
மேலும் உற்பத்தியாகும் முதல் ரக மல்லிகை சென்ட் தயாரிக்க விமானம் மூலம் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இரண்டாம் தரம், மூன்றாம் தரம் மல்லிகைப் பூக்களே உள்ளூர் சந்தைகளுக்கும், தமிழகத்தின் பிற மாவட்டங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.
தற்போது வடகிழக்குப் பருவ மழை தொடங்கி விட்டதோடு கடும் குளிரும் நிலவுகிறது. இந்த சீதோஷ்ண நிலைக்கு மல்லிகைப் பூ சரியாக வளராது.
உற்பத்தியாகும் பூக்களும் தரமில்லாமல் இருக்கும். அதனால், சந்தைகளில் 60 சதவீதம் வரத்து குறைவால் மல்லிகைக்கு, கடந்த 2 வாரமாக தட்டுப்பாடு ஏற்பட் டுள்ளது.
கடந்த தீபாவளி நேரத்திலேயே மதுரை மல்லிகைப்பூ கிலோ ரூ.2 ஆயிரத்துக்கு விற்றது. தற்போதும் கடந்த சில நாளாக ரூ.1,500 முதல் ரூ.2000 வரை விற் கப்படுகிறது. அதனால், சில்லறை வியாபாரிகளும் சந்தைகளில் கூடு தல் விலைக்கு மல்லிகையை வாங்கி சரமாகத் தொடுத்து மக்க ளுக்கு விற்பதில் ஆர்வம் காட்ட வில்லை.
மதுரை பூ மார்க்கெட்டில் நேற்று மல்லிகைப்பூ கிலோ ரூ.1,500 முதல் ரூ.2 ஆயிரம் வரையும், உசிலம்பட்டி மார்க்கெட்டில் கிலோ 2 ஆயிரம் வரையும் விற்றது. நிலக்கோட்டை மார்க்கெட்டிலும் கிலோ ரூ.2 ஆயிரம் வரை விற்றது.
இதுபற்றி தோட்டக்கலைத் துறை துணை இயக்குநர் பூபதி கூறும்போது, ‘‘பொதுவாக முகூர்த்த நாட்கள், விழாக் காலங்களில் மல் லிகைப் பூ அதிகமாக விற்கும். மே, ஜூன், ஜூலை மாதங்கள் மல்லி கைக்கு அருமையான சீசன். அப் போது அதிகமாக உற்பத்தியாகும்.
மழைக் காலமும், குளிர் கால மும் தொடங்கும் நவம்பர், டிசம் பர் முதல் ஜனவரி வரை மல் லிகைப்பூ உற்பத்தி குறையும். அதனாலேயே விலை உயர்ந்துள்ளது’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT