Published : 30 Oct 2019 10:05 AM
Last Updated : 30 Oct 2019 10:05 AM

மழைக் காலத்தின்போது விபத்துகள் ஏற்படாமல் தடுக்க மின் சாதனங்களை கையாள்வதில் கவனம் தேவை: பொதுமக்களுக்கு மின் ஆய்வுத் துறை அறிவுறுத்தல்

சென்னை

மழைக் காலத்தின்போது மின் சாத னங்களை மிகவும் கவனத்துடன் கையாள வேண்டும் என்று பொது மக்களுக்கு மின்ஆய்வுத் துறை அறிவுறுத்தியுள்ளது

இதுகுறித்து அரசு தலைமை மின் ஆய்வாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

மழைக் காலத்தின்போது மின் விபத்துகள் ஏற்படாமல் தடுக்க பொதுமக்கள் மின் சாதனங்களை மிகவும் கவனத்துடன் கையாள வேண்டும். மின்சார பிளக்குகளை பொருத்துவதற்கு முன்னரும், எடுப்பதற்கும் முன்னரும் சுவிட்சை ஆஃப் செய்ய வேண்டும். ஃபிரிட்ஜ், கிரைண்டர் போன்ற வீட்டு உபயோக மின்சாதனங்களுக்கு நில இணைப்புடன் கூடிய மூன்று பின் சாக்கெட் உள்ள பிளக்குகள் மூலமாக மட்டுமே மின்இணைப்பு கொடுக்க வேண்டும்.

உடைந்த சுவிட்சுகள், பிளக்கு களை உடனடியாக மாற்ற வேண்டும். பழுது ஏற்பட்ட மின்சாதனங் களை பயன்படுத்தக் கூடாது. ஒவ்வொரு வீட்டிலும் சரியான எர்த் பைப் போடுவதுடன், அதை குழந்தைகள் மற்றும் விலங்குகள் தொடாதவாறு அமைத்து பரா மரிக்க வேண்டும். மேலும் சுவிட்சு கள், பிளக்குகள் போன்றவற்றை குழந்தைகளுக்கு எட்டாத உயரத் தில் அமைக்க வேண்டும்.

5 ஆண்டுகளுக்கு ஒருமுறை வீட்டின் ஒயரிங் அமைப்பை சோதனை செய்து, தேவைப்பட் டால் மாற்ற வேண்டும். மின் கம்பத்துக்காக போடப்பட்டுள்ள ஸ்டே ஒயர் மீது அல்லது மின்கம் பத்தின் மீது கயிறு கட்டி துணி காயவைப்பது, கால்நடைகளை கட்டுவது போன்ற செயல்களை தவிர்க்க வேண்டும்.

மழைக் காலங்களில் மின்மாற்றிகள், மின்கம்பங்கள், மின்பகிர்வுப் பெட்டிகள் ஆகியவற்றின் அருகில் செல்லக் கூடாது. இடி, மின் னலின்போது குடிசை வீடுகள், மரத் தின் அடியிலோ, பேருந்து நிறுத்த நிழற்குடையின்கீழோ,வெட்ட வெளியிலோ நிற்க வேண்டாம். மேலும் டிவி, மிக்சி, கிரைண்டர், கணினி, தொலைபேசி போன்ற வற்றை பயன்படுத்த வேண்டாம். மழைக் காலத்தில் மின்கம்பிகள் அறுந்து விழுந்தால் அவற்றின் அரு கில் செல்ல வேண்டாம். அது குறித்து மின்வாரிய அலுவலகத் துக்கு தகவல் அளிக்க வேண்டும். ஐஎஸ்ஐ முத்திரை பெற்ற தரமான மின்சாதனங்களை மட்டுமே வாங்கி பயன்படுத்த வேண்டும்.

இவ்வாறு அரசு தலைமை மின் ஆய்வாளர் வெளியிட்டுள்ள செய் திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x