Published : 29 Oct 2019 05:28 PM
Last Updated : 29 Oct 2019 05:28 PM
விருதுநகர்
சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் அதிகமாக பயன்படுத்தி வரும் வாட்ஸ்-ஆப், முகநூல் போன்ற சமூக வளைதலங்கள் மூலம் விருதுநகர் மாவட்ட காவல்துறை பல்வேறு விழிப்புணர்வுகளை பொதுமக்களிடம் ஏற்படுத்தி வருகிறது.
போக்குவரத்து விதிமுறை மீறல்கள், ஹெல்மட் அணிவதன் அவசியம், பாதுகாப்பான பயணம் மற்றும் பொது இடங்கள், கூட்ட நெரிசல் மிக்க இடங்களில் பொதுமக்கள் தங்களது நகைகள், பணம் மற்றும் உடமைகளை பாதுகாப்பாக வைத்திருப்பது, வீட்டில் மற்றும் தொழில் நிறுவனங்களில் கண்காணிப்பு கேரமராக்கள் மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் பொருத்துவது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில், இதுபோன்ற விழிப்புணர்வுகள் பொதுமக்களை விரைவாகவும் எளிதாகவும் சென்றடையும் வகையில் சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் அதிக அளவில் பயன்படுத்தும் வாஸ்ட்-ஆப், முகநூல், டுவிட்டர் போன்ற சமூக வலைதளங்களை பயன்படுத்தி வருகிறது விருதுநகர் மாவட்ட காவல்துறை.
இதற்காக தனி அலுவலர் குழுவை நியமித்து விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதுகுறித்து காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், திருடர்கள் ஜாக்கிரதை, செல்போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டாதீர், தலை கவசம் உயிர் கவசம், சாலை விதிகளை மதிப்போம் என தெருத்தெருவாக போஸ்டர் ஒட்டினாலும், விழிப்புணர்வு பிரச்சாரங்கள் நடத்தினாலும், விழிப்புணர்வு ஊர்வலங்கள் நடத்தினாலும் அதன் 100 சதவிகித விழிப்புணர்வு ஏற்பட்டதா என்றால் அது கேள்விக்குறிதான்.
ஆனால், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவர் கைகளிலும் இப்போது ஸ்மார்ட் செல்போன் உள்ளது. அதன் முலம் முகநூல், வாட்ஸ்-ஆப், டுவிட்டர் போன்ற சமூக வலைதளங்களில் தான் அனைத்து வயது பிரிவினரும் அதிக நேரம் செலவழிக்கின்றனர். எனவே, இதுபோன்ற சமூக வலைதலங்களை பயன்படுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டமிடப்பட்டது.
அதன்படி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜராஜன் வழிகாட்டுதல்படி, சைபர் கிரைம் போலீஸார் உள்ளிட்டோர் கொண்ட தனிக்குழு அமைக்கப்பட்டு சமூக வலைதளங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT