Published : 12 Jul 2015 11:34 AM
Last Updated : 12 Jul 2015 11:34 AM

வேளாண் பல்கலை. அங்கீகாரம் பெறாமல் இடங்களை நிரப்பும் தனியார் கல்லூரிகள்: பெற்றோர்களை உங்கள் குரலில் உஷார்படுத்தும் வாசகர்

‘தமிழ்நாடு வேளாண்மை பல் கலைக்கழகத்தின் அங்கீகாரம் பெறாமல், அதன் பெயரால் சில தனியார் கல்லூரிகள் தங்கள் விருப் பம் போல் இடங்களை நிரப்பி வருகின்றன. அது தெரியாமல், பெற்றோர்கள் அந்தக் கல்லூரிகளில் தங்களது குழந்தைகளை லட்சக் கணக்கில் பணம் கொடுத்து சேர்த்து வருகின்றனர். அது குறித்து செய்தியை வெளியிட்டு மாணவர்கள் பாதிக்காமல் இருக்க வழி செய்யுங்களேன்’ என்று ‘தி இந்து’ உங்கள் குரல் மூலம் கேட்டுக் கொண்டார் திருப்பூர் மாவட் டம் மங்கலத்தை சேர்ந்த வாசகர் ஒருவர். அவர் மேலும் கூறியதாவது:

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அங்கீகாரம் பெற்று இயங்கும் கல்லூரியில் எனது மகளை சேர்க்க முயற்சி எடுத்து வருகிறேன். எனது மகளின் கட்-ஆப் மதிப்பெண் 190. அந்த அடிப்படையில் குறிப்பிட்ட தேதியில் கலந்தாய்வுக்கு அழைக் கப்பட்டிருந்தோம். ஏற்கெனவே இந்த பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வந்த 12 தனியார் கல் லூரிகளில் 5 கல்லூரிகளுக்கு மட்டும் தான் அங்கீகாரம் வழக்கம்போல் கிடைத்துள்ளது.

மீதியுள்ள 7 தனியார் கல்லூரி களுக்கு அங்கீகாரம் வழங்கப்பட வில்லை. அந்த கல்லூரிகள் கலந் தாய்விலும் இடம்பெறவில்லை என்பது அங்கு போன பின்பு தான் தெரிந்தது. அதன் விளைவு, அங்கீகாரம் பெற்ற 5 கல்லூ ரிகளில் 192 கட்-ஆப் மதிப் பெண் பெற்றவர்கள் வரை அழைக் கப்பட்டார்கள். எங்களை காத்திருப் போர் பட்டியலில் வைத்துள்ளனர்.

இந்நிலையில், அங்கீகாரம் பெறாத அந்த வேளாண் கல்லூரி களில் படுவேகமாக ‘மேனேஜ் மென்ட் கோட்டா’ நிரப்பப்பட்டு வருகிறது. பெற்றோர்களும் பழைய நினைப்பில் வேளாண் பல்கலைக்கழகத்தின் அங்கீகாரம் பெற்ற கல்லூரிதானே என்ற உறுதிப் பாட்டுடன் தங்களது குழந்தைகளை பெரும் தொகை செலவழித்து அந்த கல்லூரிகளில் சேர்க்கின்றனர் என்று அவர் தெரிவித்தார்.

இதுகுறித்து தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத் துணைவேந்தர் கே.ராமசாமியிடம் விளக்கம் கேட்டோம். அவர் கூறியதாவது: சில கல்லூரி கள் பாலிடெக்னிக், டிப்ளமோ படிப்புகளை வைத்துக் கொண்டு கூடவே எங்கள் பாடப் பிரிவு களையும் நடத்தி வந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதன் பேரில், அவற்றின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அங்கீகாரம் பெறும் தனியார் கல்லூரிகள் குறித்தும் (விதி மீறல்களை சரிசெய்து), அதற் கான அரசாணையும் இதுவரை வெளியிடப் படவில்லை. அநேக மாக அது எதிர்வரும் 18-ம் தேதிக்குப் பிறகு வரலாம் என்று எதிர்பார்க்கிறோம். அது வரை அங்கீகாரம் பெறாத தனியார் கல்லூரிகள், எங்கள் பல்கலைக்கழகத்தின் பெயரால் இடங்களை நிரப்புவது தவறு. இதுவரை எங்களுக்கு எந்த புகாரும் வரவில்லை. வந்தால் கண்டிப்பாக நடவடிக்கை எடுப் போம் என்று அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x