Published : 25 Jul 2015 11:43 AM
Last Updated : 25 Jul 2015 11:43 AM

மாநில கிக்பாக்ஸிங் போட்டிகள்: கலசலிங்கம் பல்கலை. மாணவர்கள் சாதனை

சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான கிக்பாக்ஸிங் போட்டி களில் கலசலிங்கம் பல்கலைக்கழக மாணவ ர்கள் ஒரு தங்கம், 4 வெள்ளி மற்றும் 2 வெண்கலப் பதக்கங்களை வென்றனர்.

சென்னை மாநில கிக்பாக்ஸிங் சங்கம் சார்பில், மாநில அளவிலான கிக்பாக்ஸிங் சாம்பியன்ஷிப் போட்டிகள் சென்னையில் நடை பெற்றன. பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் 400-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

இப்போட்டியில், கிருஷ்ணன்கோவில் அருகே உள்ள கலசலிங்கம் பல் கலைக்கழக 4-ம் ஆண்டு இசிஇ மாணவர் எஸ். மகாசுரேஷ் 63 கிலோ எடைப் பிரிவு லோ-கிக் போட்டியில் தங்கம் வென்றார். மேலும், பாயிண்ட் ப்பைட் முறை போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றார்.

4-ம் ஆண்டு ஆட்டோமொபைல் மாணவர் எஸ். ஷோயல்பால் தாமஸ் 57 கிலோ எடை பிரிவில் லோ-கிக் போட்டியில் வெள்ளிப் பதக்கம், புல்-காண்டாக்ட் போட்டி யில் வெண்கலம் வென்றார். 3-ம் ஆண்டு இயந்திர பொறியியல் மாணவர் கே.வி.ராம்பிரசாத் 69 கிலோ எடைப் பிரிவில் பாயிண்ட் பைட் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றார். 2-ம் ஆண்டு பி.ஆர்க் மாணவர் ஏ.எஸ். ஆதவமகாகணபதி 74 கிலோ எடைப் பிரிவில் புல்-காண்டாக்ட் போட்டியிலும், பாயிண்ட் பைட் முறையில் வெள்ளிப் பதக்கம் வென்றார்.

மேலும், ஒட்டுமொத்த சாம்பியன் போட்டியில் 2-ம் இடம் பெற்று வெள்ளிப் பதக்கத்தையும் வென்றனர். பல்கலைக்கழக வேந்தர் கே.தரன், துணைவேந்தர் சரவண சங்கர், பதிவாளர் வாசுதேவன், உடற்கல்வி இயக்குநர்கள் விஜயலட்சுமி, செல்வ கணேஷ், பரமசிவம் ஆகியோர் மாணவர்களை பாராட்டினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x