Last Updated : 25 Oct, 2019 05:43 PM

1  

Published : 25 Oct 2019 05:43 PM
Last Updated : 25 Oct 2019 05:43 PM

துபாயில் உயிருக்குப் போராடும் கணவரை மீட்க வலியுறுத்தி சிவகங்கை எஸ்.பி.,யிடம் மனு கொடுத்த பெண்

தங்கத்துரை , ஜெயப்பிரதா

சிவகங்கை

துபாயில் உயிருக்காகப் போராடும் கணவரை மீட்க வலியுறுத்தி சிவகங்கை மாவட்ட எஸ்பியிடம் பெண் ஒருவர் மனு கொடுத்தார்.

திருப்பத்தூர் அருகே குண்டேந்தல்பட்டியைச் சேர்ந்தவர் தங்கத்துரை (40). இவர் குடும்ப கஷ்டம் காரணமாக 2 ஆண்டுகளுக்க முன்பு கட்டாணிப்பட்டியைச் சேர்ந்த வெளிநாடு அனுப்பும் ஏஜன்டிடம் ரூ.60 ஆயிரம் செலுத்தி துபாய் நாட்டிற்கு சென்றார்.

கடந்த ஆறு மாதங்களாக அவருக்கு ஊதியம் வழங்கவில்லை. தீபாவளிப் பண்டிகைக்கு சொந்த ஊருக்கு திரும்புவதாக மனைவி ஜெயப்பிரதாவிடம் கூறியிருந்தார். இந்நிலையில் தங்கத்துரை ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவரது மனைவிக்கு, அங்குள்ள உறவினர் மூலம் தகவல் கிடைத்தது.

இதையடுத்து உயிருக்குப் போராடும் தனது கணவரை மீட்க வலியுறுத்தி குழந்தைகளுடன் சிவகங்கை எஸ்.பி. ரோஹித்நாதனிடம் இன்று மனு கொடுத்தார்.

இதுகுறித்து ஜெயப்பிரதா கூறியதாவது: எங்களுக்க அசுந்திகா (9), அகன் (4), சித்தா (2) ஆகிய மூன்று குழந்தைகள் உள்ளனர். குடும்ப வறுமை காரணமாக கடன் வாங்கி வெளிநாடு சென்றார். எனது கணவர் வேலை பார்த்த நிறுவனத்தில் முறையாக ஊதியம் வழங்கவில்லை.

இதனால் சிரமப்பட்டு வீட்டிற்கு பணம் அனுப்பி வந்தார். இந்நிலையில் கடந்த 6 மாதங்களாக முழுமையாக ஊதியம் வழங்கவில்லை. சம்பள பாக்கியை வாங்கிக் கொண்டு ஊருக்கு வருவதாகக் கூறியிருந்தார்.

இந்நிலையில் சம்பள பாக்கியை கேட்டபோது எனது கணவரை நிறுவன உரிமையாளர் தாக்கியதாகக் கூறப்படுகிறது. ஆனால் விபத்தில் காயமடைந்ததாகக் கூறுகின்றனர். மருத்துவமனையில் ஆபத்தானநிலையில் இருக்கும் எனது கணவரை மீட்டு இந்தியா கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x