Published : 24 Jul 2015 08:25 AM
Last Updated : 24 Jul 2015 08:25 AM

திருவாரூர் மத்தியப் பல்கலைக்கழக சுற்றுச்சுவரின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது: கட்டுமானங்களின் தரம் குறித்து பொதுமக்கள் அச்சம்

திருவாரூர் மத்தியப் பல்கலைக் கழகத்தில் சுற்றுச்சுவரின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. இத னால், இப்பல்கலைக்கழக கட்டுமானங்கள் குறித்து பொதுமக்களி டையே அச்சம் எழுந்துள்ளது.

திருவாரூர் அருகில் உள்ள நீலக்குடி மற்றும் நாகக்குடியில் சுமார் 560 ஏக்கர் நிலப்பரப்பில் மத்திய பல்கலைக்கழகம் அமைந் துள்ளது. இந்த வளாகத்துக்குள் பல்வேறு துறைகளுக்கான கட்டிடங்கள் கட்டும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின் றன.

இந்த பல்கலைக்கழக வளாகத்தைச் சுற்றிலும் 10 அடி உயரத் துக்கு, ரூ.5.08 கோடி செலவில் சுற்றுச்சுவர் எழுப்பப்பட்டுள்ளது.

இந்நிலையில், நேற்று முன் தினம் இரவு இப்பகுதியில் மழை பெய்ததால், நேற்று அதிகாலை பல்கலைக்கழக சுற்றுச்சுவரின் ஒரு பகுதி சுமார் 150 மீட்டர் நீளத்துக்கு இடிந்து விழுந்தது. இதனால், யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.

எனினும், அண்மையில், இப்பல்கலைக்கழக விருந்தினர் இல்லம் கட்டுமானத்தின்போது, “பெர்கோலா” வடிவிலான பிரம் மாண்ட முகப்பு கட்டுமானம் இடிந்து விழுந்தது. இதில், 5 தொழிலாளர்கள் பலியாகினர். 16 பேர் பலத்த காயமடைந்தனர்.

இதுகுறித்த நினைவுகள் மறைவதற்குள், சுற்றுச்சுவரின் ஒருபகுதியும் இடிந்து விழுந்துள் ளதால், இப்பல்கலைக்கழக கட்டு மானங்களின் தரம் குறித்த அச்சம் எழுந்துள்ளது.

இடிந்து விழுந்துள்ள சுற்றுச் சுவரின் அடித்தளம், கட்டுமான திட்டத்தில் சுட்டிக்காட்டியபடி, கான்கிரீட் தளம் மற்றும் தூண்கள் அமைக்காமல் எழுப்பப்பட்டுள்ள தாகவும், உயரத்துக்கு ஏற்ற அடித் தள உறுதித்தன்மை இல்லாததால் இடிந்து விழுந்ததாகவும் கூறப்படு கிறது.

மேலும், ரூ.5.08 கோடியில் கட்டப்பட்ட சுற்றுச்சுவரின் மற்ற இடங்களிலும் ஆங்காங்கே பெரும் வெடிப்புகள் காணப்படுவதாகவும், அதனால் ஒட்டுமொத்த சுற்றுச் சுவர் மற்றும் கட்டிடங்களின் உறுதித்தன்மைக் குறித்து முழுமையான ஆய்வு செய்ய வேண்டும் என கல்வியாளர்களும், பொதுமக்களும் வலியுறுத்துகின் றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x