Published : 23 Oct 2019 05:44 PM
Last Updated : 23 Oct 2019 05:44 PM

தீபாவளி பண்டிகை; வெளியூர் செல்லும் பயணிகளுக்காக 24 மணிநேரமும் இயங்கும் மாநகரப் பேருந்துகள் 

சென்னை

தீபாவளித் திருநாளை முன்னிட்டு சென்னை மாநகரில் போக்குவரத்து நெரிசலை வெகுவாகக் குறைத்திடவும், வெளியூர் செல்லும் பயணிகள் எளிதாகப் பயணிக்கும் வகையில், நாளை (24.10.2019) முதல் 26.10.2019 வரையிலான ஆகிய 3 நாட்களுக்கும் வெளியூர் செல்லும் பேருந்துகள் ஐந்து இடங்களில் இருந்து புறப்படும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

1. மாதவரம் புறநகர் பேருந்து நிலையம்

2. தாம்பரம் புதிய பேருந்து நிலையம் (மெப்ஸ்) - தாம்பரம் ரயில் நிலைய பேருந்து நிலையம்

3. பூந்தமல்லி பேருந்து நிலையம்

4. புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் பேருந்து நிலையம் (கோயம்பேடு)

5. கே.கே.நகர் பேருந்து நிலையம்

சென்னை மாநகரின் பல்வேறு பகுதிகளிலிருந்து மேற்குறிப்பிட்ட ஐந்து பேருந்து நிலையங்கள் மூலம் மாநகரப் பேருந்துகள் ஏற்கெனவே இயக்கப்பட்டு வருகின்றன. எனினும் எதிர்வரும் தீபாவளித் திருநாளை முன்னிட்டு, வெளியூர் பயணிகள் மேற்குறிப்பிட்டுள்ள ஐந்து பேருந்து நிலையங்களுக்கு எளிதாகச் செல்லவும், வெளிமாவட்ட நீண்ட தூரப் பேருந்துகளைப் பிடிப்பதற்கு ஏதுவாகவும், மாநகர போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் மூன்று நாட்களுக்கு 24 மணி நேரமும் மாநகரப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

கூடுதலாக 310 சிறப்பு இணைப்பு பேருந்துகள் பின்வருமாறு 24.10.2019 முதல் 26.10.2019 ஆகிய 3 நாட்களில் 24 மணி நேரமும் இயக்கப்படுகிறது.

தடம் எண் புறப்படும் இடம் சேருமிடம் பேருந்துகளின் எண்ணிக்கை குறித்த விவரங்கள்:

1. மாதவரம் Moffusil Bus Terminus

121 கட் சர்வீஸ் எம்.ஜி.ஆர். பேருந்து நிலையம், கோயம்பேடு - மாதவரம் புதிய பேருந்து நிலையம் - 7 பேருந்துகள்

114 - செங்குன்றம் - எம்.ஜி.ஆர். பேருந்து நிலையம், கோயம்பேடு - 7 பேருந்துகள்

121.F - தாம்பரம் - மாதவரம் புதிய பேருந்து நிலையம் 7 பேருந்துகள்

121.H - தாம்பரம் - கவியரசு கண்ணதாசன் நகர் 7 பேருந்துகள்

42 M மாதவரம் புதிய பேருந்து நிலையம் - பிராட்வே 2 பேருந்துகள்

57 F - உயர் நீதிமன்றம் - காரனோடை - 2 பேருந்துகள்

157- திருவொற்றியூர் - செங்குன்றம் - 4 பேருந்துகள்

மொத்தம் 36 பேருந்துகள்

2 . தாம்பரம் சானடோரியம் (மெப்ஸ்)பேருந்து நிலையம் - தாம்பரம் ரயில் நிலையம்

21 G பிராட்வே - வண்டலூர் உயிரியல் பூங்கா (வழி: மெப்ஸ்) - 12 பேருந்துகள்

B.18 பிராட்வே - கூடுவாஞ்சேரி (வழி:மெப்ஸ்) - 7 பேருந்துகள்

91 - திருவான்மியூர் - தாம்பரம் (வழி: மெப்ஸ்) - 9 பேருந்துகள்

95 - திருவான்மியூர் - தாம்பரம் (மெப்ஸ்) - 10 பேருந்துகள்

99 அடையாறு பே.நி - தாம்பரம் (மெப்ஸ்) -12 பேருந்துகள்

51 வேளச்சேரி - தாம்பரம் (மெப்ஸ்) - 10 பேருந்துகள்

517 சிரவ கோவளம் - தாம்பரம் (மெப்ஸ்) - 12 பேருந்துகள்

500 செங்கல்பட்டு - தாம்பரம் (மெப்ஸ்) - 10 பேருந்துகள்

583- ஸ்ரீபெரும்புதூர் - தாம்பரம் புதிய பே.நி. (மெப்ஸ்) - 5 பேருந்துகள்

555 - திருப்போரூர் - தாம்பரம் - (மெப்ஸ்) - 7 பேருந்துகள்

v.51 - தி.நகர் - தாம்பரம் (மெப்ஸ்) - 5 பேருந்துகள்

99 - சிரவ - சோழிங்கநல்லூர் - தாம்பரம் (மெப்ஸ்) - 2 பேருந்துகள்

515 - மாமல்லபுரம் - தாம்பரம் - 2 பேருந்துகள்

G18 கூடுவாஞ்சேரி (வழி: மெப்ஸ்) - தியாகராயர் நகர் - 2பேருந்துகள்

5K. - தாம்பரம் (மெப்ஸ்) - தியாகராயர் நகர் - 1 பேருந்து

மொத்தம் 106 பேருந்துகள்

3- பூவிருந்தவல்லி பேருந்து நிலையம்

62 பூவிருந்தவல்லி - செங்குன்றம்- 12 பேருந்துகள்

65 B பூவிருந்தவல்லி - அம்பத்தூர் எஸ்டேட் -7 பேருந்துகள்

66 பூவிருந்தவல்லி - தாம்பரம் - 11 பேருந்துகள்

54 பூவிருந்தவல்லி - பிராட்வே - 6 பேருந்துகள்

101 பூவிருந்தவல்லி - திருவொற்றியூர் - 12 பேருந்துகள்

153 பூவிருந்தவல்லி - எம்.ஜி.ஆர் பேருந்து நிலையம், கோயம்பேடு - 15 பேருந்துகள்

54 F பூவிருந்தவல்லி - மந்தைவெளி - 2 பேருந்துகள்

154 பூவிருந்தவல்லி - தி.நகர் - 7 பேருந்துகள்

மொத்தம் 72 பேருந்துகள்

4.கே.கே.நகர் பேருந்து நிலையம்

ஜி70 - திருவான்மியூர் - எம்.ஜி.ஆர் பேருந்துநிலையம்,- கோயம்பேடு - 7 பேருந்துகள்

5F - வடபழனி - பெசன்ட் நகர் - 3 பேருந்துகள்

T70 - எம்.ஜி.ஆர் பேருந்து நிலையம், கோயம்பேடு - திருவான்மியூர் (வழி) அசோக்பில்லர் -7 பேருந்துகள்

570.V - வடபழனி - கேளம்பாக்கம் - 2 பேருந்துகள்

70 - தாம்பரம் - ஆவடி - 2 பேருந்துகள்

570 - கேளம்பாக்கம் - எம்.ஜி.ஆர் பேருந்து நிலையம், கோயம்பேடு - 2 பேருந்துகள்

மொத்தம் 23 பேருந்துகள்

5.எம்.ஜி.ஆர் பேருந்து நிலையம், கோயம்பேடு

159.A - திருவொற்றியூர் - எம்.ஜி.ஆர் பேருந்து நிலையம், கோயம்பேடு - 6 பேருந்துகள்

72.C - திருவேற்காடு - எம்.ஜி.ஆர் பேருந்து நிலையம், கோயம்பேடு - 2 பேருந்துகள்

121.M மாதவரம்- எம்.ஜி.ஆர் பேருந்து நிலையம், கோயம்பேடு- 6 பேருந்துகள்

27.B அண்ணாசதுக்கம் - எம்.ஜி.ஆர் பேருந்து நிலையம், கோயம்பேடு -4 பேருந்துகள்

15.B பிராட்வே - . எம்.ஜி.ஆர் பேருந்து நிலையம், கோயம்பேடு - 4 பேருந்துகள்

46.G மகாகவி பாரதி நகர் - எம்.ஜி.ஆர் பேருந்து நிலையம், கோயம்பேடு - 5 பேருந்துகள்

M.70 - திருவான்மியூர் - எம்.ஜி.ஆர் பேருந்து நிலையம், கோயம்பேடு - 4 பேருந்துகள்

77 ஆவடி - எம்.ஜி.ஆர் பேருந்து நிலையம், கோயம்பேடு - 6 பேருந்துகள்

46 திரு.வி.க.நகர் எம்.ஜி.ஆர் பேருந்து நிலையம், கோயம்பேடு - 6 பேருந்துகள்

570 கேளம்பாக்கம் - எம்.ஜி.ஆர் பேருந்து நிலையம், கோயம்பேடு - 2 பேருந்துகள்

159.E - எண்ணூர் - எம்.ஜி.ஆர் பேருந்து நிலையம், கோயம்பேடு - 3 பேருந்துகள்

570 -EXTN. திருப்போருர் - எம்.ஜி.ஆர் பேருந்து நிலையம், கோயம்பேடு - 4 பேருந்துகள்

16ரி - குன்றத்தூர் - எம்.ஜி.ஆர் பேருந்து நிலையம், கோயம்பேடு - 1 பேருந்து

570.C - கண்ணகிநகர் - எம்.ஜி.ஆர் பேருந்து நிலையம், கோயம்பேடு - 1 பேருந்து

48.C - வள்ளலார் நகர் - எம்.ஜி.ஆர் பேருந்து நிலையம், கோயம்பேடு - 2 பேருந்துகள்

121.A மணலி - எம்.ஜி.ஆர் பேருந்து நிலையம், கோயம்பேடு - 2 பேருந்துகள்

70.V- வண்டலூர் ZOO - எம்.ஜி.ஆர் பேருந்து நிலையம், கோயம்பேடு - 15 பேருந்துகள்

மொத்தம் 73 பேருந்துகள்

மொத்தமாக ஐந்து பேருந்து நிலையங்களையும் இணைக்கும் விதமாக சென்னை போக்குவரத்து கழகம் மொத்தம் 310 பேருந்துகளை இயக்குகிறது.

இவ்வாறு மாநகர போக்குவரத்துக்கழக மேலாண் இயக்குனர் தெரிவித்துள்ளார்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x