Published : 04 Jul 2015 08:37 AM
Last Updated : 04 Jul 2015 08:37 AM

ரூ.5000 லஞ்சம் வாங்கியதாக ஆலங்குடி வட்டாட்சியர் கைது: வருவாய்த் துறையினர் எதிர்ப்பு

புதுக்கோட்டை அருகே ஆலங்குடி யில் ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய தாக வட்டாட்சியர் நேற்று கைது செய்யப்பட்டார். இதற்கு வரு வாய்த் துறையினர் எதிர்ப்பு தெரி வித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

ஆலங்குடி அருகேயுள்ள கோவிலூரைச் சேர்ந்தவர் நவநீதகிருஷ்ணன்(42). விவசாயி. கடந்த ஜூன் 29-ம் தேதி இவர் தனது சொந்த தேவைக்காக அவரது தோட்டத்திலிருந்து 2 டிராக்டர்கள் மூலம் மண் அள்ளிச் சென்றுள்ளார்.

அப்போது, அவ்வழியாக காரில் சென்ற ஆலங்குடி வட்டாட்சியர் எம்.வெங்கடாசலம், அனுமதி இல்லாமல் மண் அள்ளிச் செல்வதாகக் கூறி, 2 டிராக்டர்களின் சாவிகளையும் எடுத்துச் சென்றுவிட்டாராம்.

இது குறித்து நவநீதகிருஷ் ணன், வெங்கடாசலத்தை அவரது அலுவலகத்தில் சந்தித்துக் கேட்ட போது, ரூ.15 ஆயிரம் கொடுத்தால் டிராக்டர் சாவிகளைக் கொடுப்ப தாகக் கூறினாராம். அதன்படி, நவநீதகிருஷ்ணன் மறுநாள் ரூ.15 ஆயிரத்தை வெங்கடாசலத்திடம் கொடுத்தாராம். பின்னர், வெங்கடா சலம் மேலும் ரூ.5 ஆயிரம் கேட் டுள்ளார். இதையடுத்து, வட்டாட் சியர் வெங்கடாசலம் மீது நட வடிக்கை எடுக்க வேண்டும் என புதுக்கோட்டை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாரிடம் நேற்று முன்தினம் நவநீதகிருஷ்ணன் புகார் அளித்துள்ளார்.

போலீஸாரின் ஆலோசனைப் படி, நேற்று ஆலங்குடி வட்டாட் சியர் அலுவலகத்துக்குச் சென்று ரூ.5 ஆயிரத்தை கொடுத்தபோது, அதை வாங்காத வட்டாட்சியர் இருக்கையின் அருகே இருந்த பெட்டியில் (டிராயரில்) போடுமாறு கூறினாராம். அதன்படி, பெட்டியில் பணத்தை வைத்தபோது, அங் கிருந்த காவல் துணைக் கண் காணிப்பாளர் தங்கவேல் தலை மையிலான ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு ஆய்வாளர் கள் டி.ராமச்சந்திரன், பூமிநாதன் உள்ளிட்டோர் வெங்கடாசலத்தை கைது செய்து, புதுக்கோட்டை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். ஆலங்குடி வட் டாட்சியர் அலுவலகத்திலிருந்து வெங்கடாசலத்தை கைது செய்து வெளியே அழைத்து வந்தபோது, அதற்கு எதிர்ப்பு தெரிவித்த வருவாய்த் துறையினர், லஞ்சம் கொடுத்தவரையும் கைது செய்யக் கோரி முழக்கமிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x