Published : 22 Oct 2019 09:10 AM
Last Updated : 22 Oct 2019 09:10 AM
சென்னை
தீபாவளிப் பண்டிகை நெருங்கும் நிலையில், பருவமழை மிரட்டு வதால் பட்டாசுக் கடை வியாபாரி கள் கலக்கத்தில் உள்ளனர்.
கடந்த ஆண்டுகளில் தீபாவளி நேரத்தில் மழை கொட்டியதால் பட்டாசு விற்பனை பெரிதும் பாதித்தது. குறிப்பாக 2015-ம் ஆண்டு பெய்த கனமழையால் பட்டாசு வியாபாரிகளுக்கு கடும் நஷ்டம் ஏற்பட்டது.
பொதுவாக சென்னையில் தீவுத்திடல், ஒய்எம்சிஏ, கொட்டி வாக்கம், கோயம்பேடு, போரூர் உள்ளிட்ட இடங்களில் பட்டாசுக் கடைகள் அமைக்கப்படுவது வழக்கம். இந்த ஆண்டு தீவுத்திட லில் 60-க்கும் மேற்பட்ட பட்டாசு கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. பார்க்கிங் வசதி, குடிநீர், கழிப் பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதி கள் மக்களுக்கு செய்து தரப் பட்டுள்ளன.
இந்நிலையில், வடகிழக்குப் பருவமழை சீசன் தொடங்கியதில் இருந்து அவ்வப்போது மழை பெய்துவருவதால் பட்டாசு வாங்க வரும் மக்களின் கூட்டம் குறை வாக இருக்கிறது. இந்நிலை நீடித்தால் இந்த ஆண்டும் மிகப்பெரிய வருவாய் இழப்பு ஏற் படும் என்று பட்டாசு வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து சென்னை பட்டாசு விற்பனையாளர்கள் நலச் சங்க செயல் தலைவர் காஜா முகைதீன் கூறும்போது, “மழையால் தற்போது பட்டாசு விற்பனை பாதிப்பு இல்லை. வரும் வியாழன், வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் அடைமழை இல்லாமல், இப்போது பெய்வது போல அவ்வப்போது விட்டுவிட்டு மழை பெய்தால் விற்பனையில் பெரிய பாதிப்பு இருக்காது.
உச்ச நீதிமன்ற உத்தரவு காரணமாக கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு பட்டாசு உற்பத்தி 40 சதவீதம் குறைந்துள்ளதால், பட்டாசு வரத்தும் குறைவாகவே இருக்கிறது. எனவே, கடந்த காலங்களைப் போல இல்லாமல், 2 நாட்களிலே கூட பட்டாசு விற்றுத் தீர்ந்துவிடும் நிலை உள்ளது. மழை மற்றும் பட்டாசு உற்பத்தி குறைவு காரணமாக கடைசிநேர ஏமாற்றத்தைத் தவிர்க்க, மக்கள் முன்கூட்டியே பட்டாசு வாங்கிக் கொள்வது நல்லது" என்றார்.
விற்பனை பாதிக்கும்
தமிழ்நாடு பட்டாசு தொழில் மற்றும் தொழிலாளர்கள் நலச் சங்கத் தலைவர் நா.ராசா கூறும்போது, “இந்த ஆண்டு பசுமைப் பட்டாசுகள் வருகை மற்றும் வெடி வெடிப்பதற்கான நேரக் கட்டுப்பாடு குறித்த கெடுபிடி இல்லாததால் மக்கள் ஆர்வமாக பட்டாசு வாங்குவார்கள் என எதிர்பார்க்கிறோம். ஒவ்வொரு கடையிலும் கடந்த சனி, ஞாயிற்றுக்கிழமை ரூ.10 லட்சம் வரை பட்டாசு விற்பனையாகும் என்று எதிர்பார்த்த நிலையில், மழை காரணமாக ரூ.2 லட்சத்துக்கு மட்டுமே விற்பனையானது. தீபாவளிக்கு சில நாட்களுக்கு முன் கனமழை பெய்தால் பெரும் பாதிப்பு ஏற்படும்" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT